தனது உடல்நிலை தனக்கு ஒரு பிரச்சினை இல்லை
என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கொலன்னாவை
ஆசனத்தை பொறுப்பேற்று தனது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்கப் போவதாகத்
தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்
ஜனாதிபதி தொழிற்சங்கத்தின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின்
படுகொலை சந்தேகநபரான துமிந்த சில்வா எம்.பி, கொழும்பு நவலோகா
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment