Sunday, April 28

பாகிஸ்தான் இறக்குமதி உருளைக்கிழங்கு கொள்கலனில் கருக்கலைப்பு மருந்து!

பாகிஸ்தான் இறக்குமதி உருளைக்கிழங்கு கொள்கலனில் கருக்கலைப்பு மருந்து!


April 27, 2013  02:06 pm
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைகிழங்கு கொள்கலனில் இருந்து கருக்கலைப்புக்காக பயன்படுத்தப்படும் 300 லட்சம் ரூபா பெறுமதியான 30,000 மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த மருந்து குப்பிகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரஜை ஒருவர் பாகிஸ்தானில் இருந்து இந்த மருந்து குப்பிகளை கொண்டுவந்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு இறக்குமதி செய்த கொள்கலனை இன்று (27) சோதித்த போதே இந்த மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூன்று கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் ஒன்றில் 15 பொதிகளில் காணப்பட்ட கருக்கலைப்பு மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment