Tuesday, April 30

மின் கட்டணங்களை குறைக்க அரசு திட்டம்?

 
 
மின்சாரக் கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக மின்வலு எரிசக்தி அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிராக எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியின் சில உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.சீ.பெர்டினான்டோ தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், எந்த அடிப்படையில் எவ்வாறு கட்டண அறவீடு செய்வது என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சொற்ப அளவில் அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

No comments:

Post a Comment