பிரதமர் டி.எம்.ஜயரத்ன அவர்களுக்கு கொரிய அரசாங்கத்தால் கலாநிதி பட்டம்
வழங்கி கௌரவிக்கப்பட்டமையை முன்னிட்டு புத்தசாசன மதவிவகார அமைச்சின்
ஏற்பாட்டில் இன்று (30) அவரை கௌரவித்து நினைவுப் பரிசில்கள் வழங்கும்
நிகழ்வு அமைச்சின் செயலாளர் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில்
நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஏ.எச்.எம்.பௌசி, கலாசார
அமைச்சர் ஏ.பி.ஏக்கநாயக்க, பீலிக்ஸ் பெரேரா, பிரதியமைச்சர்
எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன, சமயத் தலைவர்கள், புத்தசாசன அமைச்சு,
புத்தசாசன கலாசார திணைக்களம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,
இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கத்தோலிக்க அலுவல்கள் திணைக்களம்
ஆகியவற்றின் அதிகாரிகள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment