கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விசாரணைகளுக்கு
முகம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படும் நிலையில். அரச சார்பான இலங்கை
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் ஆங்கில இணையத்தளம் ஆஸாத் சாலி தொடர்பாக நேற்று 27 .04.2013 பதிவு செய்துள்ள செய்தியை இங்கு தருகிறோம் .
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆஸாத் சாலி மேற்கொண்ட சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவின் ஜூனியர் விகடன் தமிழ்
இணையத்தளத்துக்கு ஆஸாத் சாலி வழங்கிய செவ்வி பயங்கரவாதத்துக்கு தலைமை
தாங்குவது பற்றி வெளிப்படுத்தியுள்ளார் . அரசுக்கு எதிரான தமிழ்
பயங்கரவாதத்தை போல முஸ்லிம்களும் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டம் ஒன்றை
முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார் . தற்போதைய
நிலையில் மக்கள் ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டிய தேவை மாத்திரமே உள்ளது.
அதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட
இவ்வாறான இஸ்லாமிய ஆயுத குழுவுக்கு நானும் ஆதரவு வழங்குவேன் என அவர்
தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஆய்வாளர்கள் இது பயங்கரவாதத்தை
தூண்டுவதை காட்டுவதாக கூறுகிறார்கள். இலங்கை சட்டத்தின் பிரகாரம்
பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக அறிக்கைகள்
விடுதல் , மற்றும் பயங்கரவாதத்தின் சார்பாக தோன்றுதல் என்பன தண்டனைக்குரிய
நடவடிக்கைகளாகும்.
சட்ட வல்லுனர்கள் இலங்கை பிரஜையான ஆஸாத்
சாலி நாட்டின் சட்டத்தை மீறியுள்ளார் என்று கூறுகிறார்கள். அண்மையில்
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்கவுடன் வடக்குக்கு விஜயம்
செய்த ஆஸாத் சாலி உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டுமென
கோரியிருந்தார். இலங்கைக்குள் இனவாதத்தை தூண்டும் SMS களை அனுப்பியதாக அவர்
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். தமிழ் புலம்பெயர்ந்தோருடன் நேரடி தொடர்பு
கொண்டிருக்கும் தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழ்
புலம்பெயர்ந்தோர் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தும் முனைவுக்கு பங்களிப்பு
செய்து நாட்டை பயங்கரவாதத்தின் பால் தள்ள முயற்சிப்பதாகவும் அவர் மீது
குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என்று அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Azath Salley expresses support to terrorism
A conspiracy hatched by Azath Salley to carry out terrorist activities in Sri Lanka has come to light.
Azath
salley in an interview with the Junior Vikatan, website of Tamil Nadu
has revealed about providing leadership to terrorism. Azath Salley has
said that similar to the Tamil terrorism against the country, the
Muslims too will have to act against the government through an armed
struggle. As of now the people only have to take the weapons. The
backdrop has been prepared for the activities. Azath Salley said that he
too will support such an Islamic armed group to act against the
government.
Defence analysts say that this indicates
inciting terrorism. Under the Sri Lankan law making statements that
encourage terrorism, supporting terrorism, and appear on behalf of
terrorism are punishable acts. Legal experts say that Azath Salley who
is a Sri Lankan citizen has violated the law of the land. Azath salley
who visited the north recently with UNP leader Ranil wickramasinghe has
called for the removal of the High Security Zones. He is also accused of
sending SMS messages within Sri Lanka to incite racism. Information has
also come to light on maintaining direct connection with the Tamil
diaspora. He is accused of contributing towards the attempts made by the
diaspora to create anarchy in the country and push it towards
terrorism.
No comments:
Post a Comment