‘மச்சான் ஞானசார’ என்ற கட்டுரை எழுதிய பெப்பராசியா சிங்கள சிஞ்சிகையின்
ஆசிரியர் 4ஆம் மாடிக்கு அழைக்கப் பட்டுள்ளார். பொதுபல சேனாவின் பொது
செயளாலர் கலபொட அத்தே ஞானசார தேரர் தொடர்பாக ‘மச்சான் ஞானசார’ என்ற
தலைப்பில் கட்டுரை ஒன்றை
அண்மையில் எழுதியமை தொடர்பாக பெப்பராசியா சிஞ்சிகையின் ஆசிரியர் சோபால
அமரசிங்க விசாரணைக்காக 4ஆம் மாடிக்கு அழைக்கப் பட்டுள்ளார் என்று தகவல்கள்
வெளியாகியுள்ளது.
அண்மையில் ‘மச்சான் ஞானசார’ என்ற
தலைப்பில் பிரபல பெப்பராசியா சிங்கள சிஞ்சிகையில் அதன் ஆசிரியர் சோபால
அமரசிங்க கட்டுரை ஒன்றில் ஞானசார போன்ற பெளத்த தேரர்கள் இனவாதத்தையும்
மதவாதத்தையும் பரப்புவதை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு ஆக்கத்தை
பதிவு செய்திருந்தார். அதை தொடர்ந்து பொதுபல சேனா குறித்த கட்டுரை
தம்மையும் பௌத்தத்தையும் அவமானப்படுத்துவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப் படும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளிடம் இது தொடர்பாக
முறையிடப் பட்டுள்ளது என்றும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பெப்பராசியா சிஞ்சிகையின்
ஆசிரியர் சோபால அமரசிங்க பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் என்று
தெரிவித்தவர்களால் தான் விசாரிக்கப்பட்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்தமையும்
குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment