Tuesday, April 30

இலங்கை பெளத்தர்களுக்கு சொந்தமானதல்ல : முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

 
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்ற கருத்தில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார்.
பட்டமுல்ல கந்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
சில அரசியல்வாதிகள் இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனினும், இதில் எவ்வித உண்மையுமில்லை.
 
சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 
இன,மத,குல பேதங்களை களைந்து சமாதானத்துடன் வாழ அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment