கொழும்பு
மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை நாளை காலை ஒன்பது
மணிக்கு பொலிஸில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தின்
நான்காம் மாடியிலுள்ள லசன்த ரத்னாயக்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அசாத் சாலி தரப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக அஸாத் சாலி வெளியிட்டுள்ள ஊடக
அறிக்கையில் “எனது இல்லத்தில் நேற்று மாலை இரகசிய பொலிஸார் தேடுதல்
மேற்கொண்டனர். இதன்போது என்னை விசாரித்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில்
நான் வீட்டில் இருக்கவில்லை. எனது மனைவியே பொலிஸாரின் கேள்விகளுக்கு பதில்
அளித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தின் நான்காம் மாடியிலுள்ள
லசன்த ரத்னாயக்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு எழுத்து மூலமான
ஒரு குறிப்பை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக
வழக்குத் தொடரப்பட உள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர்
ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே
ஞானசார தேரரின் சில நடவடிக்கைகள் குறித்தும் நீதிமன்றில் முறைப்பாடு
செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். என்பது சுட்டிக் காட்டத் தக்கது
No comments:
Post a Comment