ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற
உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், தனக்கு பல தடவைகள் தொலைபேசி மூலம் கொலை
அச்சுறுத்தல்விடுக்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இவற்றில் அதிகமான கொலை அச்சுறுத்தல்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை
பகுதியிலிருந்தே விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும்
தான் செயற்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இவ்வாறு கொலை
அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த வருடம் ரமழான்
பெருநாள் வரை அச்சுறுத்தல்காரர்கள் காலக்கெடு விதித்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.
"எனக்கு இறுதியாக ஏப்ரல் 19 அன்று வந்த தொலைபேசி அழைப்பு மூலம்
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. எதிர்வரும் ரமழானுக்குள் உன் கதை முடியும்
என மறுமுனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இது தொடர்பில் நான்
பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். எனது கையடக்கத் தொலைபேசிக்கும்
வீட்டிலுள்ள நிலையான தொலைபேசிக்குமே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் அழைப்புகள்
வந்தன" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
I think Mr Ashwer planning for ministy!!!
ReplyDeleteHe has to understand why people are doing?
Mr Aswer ask goventment to send CID to kalmunai!!!