அண்மையில் நுகேகொடையில் உள்ள ‘பெசன் பக்’ வியாபார ஸ்தாபானம் சிலரினால்
தாக்குதலுக்கு இலக்கானது. இதனை சேதமாக்கியதில் சம்பந்தப்பட்டவர்களின் சிலரை
பொலிசார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இவ் வழக்கினை பெசன்
பக் உரிமையாளரிடம் வாபஸ்
பெறச் சொன்னதாக சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் என் மீது பழி
சுமத்துகின்றனர். நான் அவ்வாறு செயல்படவில்லை என பிரதிமைச்சர் பைசர்
முஸ்தபா தெரிவித்தார்.
கடந்த ஞயிற்றுக்கிழமை (28)ம் திகதி மருதாணை
டவர் அரங்கில் வெல்லம்பிட்டிய அகதியத்துல் தாருல்சலாம் அகதியா பாடசாலை
மாணவர்களது பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
உரையாற்றும்போதே முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும் ஐனாதிபதி
சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு தெரவித்தார்.
மறைந்த நுஹ்மான் ஹாஜியார் அவர்களின்
முயற்சியில் 1996 ஆம் ஆண்டு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் சாறாஸ் கார்டனில்
உருவாக்கப்பட்ட ஜூம்ஆப் பள்ளிவாசலிலேயே அகதியா பாடாசலையும் ஆரம்பித்து
வைக்கப்பட்டது. இவ் அகதியா பாடாசலை 13 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது.
இங்கு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வாழும் 650 மாணவ மாணவிகள் இஸ்லாமிய
மார்க்க கல்வியை பயின்று வருகின்றனர்.
இந் நிகழ்வுகள் அகதியா பாடசாசை அதிபரும்
முல்லேரியா கொட்டிகாவத்தை பிரதேச சபை உறுப்பினருமான மௌலவி அலியார் சனீக்
தலைமையில் நடைபெற்றது.
கௌரவ அதிதியாக புரவலர் ஹாசீம் உமர், கொழும்பு மாவட்ட அகதியாக அமைப்பின் தலைவர் எம். ஆர்.எம் சருக் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் அல் ஹிலால் எனும்
நூலொன்றும், அகதியத்துல் தாருல் ஸலாம் வெப்தளமும் ஆரமப்pத்து
வைக்கப்பட்டது. மாணவர்களது இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளில்
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதலும் அதிதிகளினால்
வழங்கப்பட்டது.
பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
1951ஆம் ஆண்டு கலாநிதி அசீஸ் அவர்கள்
அகதியா பாடசாலை முறை முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று இவ் அகதியா
பாடசாலைகள் கொழும்பு மாவட்டம் அல்லாது நாட்டின் பல பாகங்களிலும் விரிந்து
பரந்து காணப்படுகின்றது. இத்திட்டத்தினால் இலங்கையில் உள்ள முஸ்லீம் மாணவ
மாணவிகளுக்கு இஸ்லாமிய மார்க்கக் கல்வியில் பாரியதொரு சேவையை செய்து
வருகின்றது. கொழும்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் சிறார்கள் பெரும்பாலோனோர்
சிங்கள மொழி மூல பாடசாலைகளிலும் மற்றும் சர்வதேச பாடசாலைகளிலுமே
பயிலுகின்றனர். இம் மாணவர்களுக்கு சனி ஞயிறு தினங்களில் அகதியா கல்விமுறை
பெரிதும் பயணளிக்கின்றது.
நமது பிள்ளைகளை கல்வியலாளர்கள்,அல்லது
சட்டத்தரணிகள், வைத்தியர்கள் பொறியியலாளர்களாக வருவதற்காகவே நாம்
கற்பிக்கின்றோம். இத் தொழில்களில் எமது பிள்ளைகள்; சிறந்து விளங்கினாலும்,
மார்க்கக் கல்வி இல்லாவிட்டால் அவரது வாழ்க்கை பயணற்றதாகவே அமைந்து விடும்
ஆகவேதான் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைப் பருவத்திலேயே கட்டாயமாக
இஸ்லாமிய மத வாழ்க்கை முறைமையை பயிற்சியை வழங்கிடல் வேண்டும். அதற்காகவே
அகதியா எனும் கல்விமுறைக்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுத்தல்
வேண்டும்.
மாணவப்பருவத்தில் நாம் பெற்ற அகதியா
இஸ்லாமிய வாழ்ககை முறைதான் ஒரு பூரணத்துவமிக்கவராகவும் ஒழுக்கமுல்லவராகவும்
ஏனைய சமுகங்கள் மத்தியில் ஒர் உதாரண புருஷராக வாழ்வதற்கு அகதியா
இஸ்லாமியக் கல்வி முறை கட்டாயம் தேவைப்படுகின்றது.இக் கல்விமுறைக்கு
அரசியல்வாதிகள் வியாபர சமுகத்தவர்கள் அறிஞர்கள் உதவ முன்வருதல் வேண்டும்
.என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
About these ads
No comments:
Post a Comment