Wednesday, May 1

அரச வைத்தியசாலை முஸ்லிம் பெண்களின் சீருடையில் கைவைக்கும் ஜாதிக்க ஹெல உரிமய

7

தங்கள்  சீருடைகளை மாற்றுவதன் மூலம் நாட்டில் பொது சட்டதை  மீறும்  முஸ்லிம் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டும், என்று ஜாதிக்க ஹெல உரிமை கட்சியின் தலைவர்  ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார் ,என்று சிங்கள, ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன .மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது  , அதிகாரிகள் இதன்  ஆபத்தை விளங்கி கொள்ள வேண்டும்.  இது தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன நல்லுறவுக்கு  குந்தகம் விளைவிக்க  முன், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ,இது இஸ்லாமிய தீவிரவாதம் முழு நாட்டையும்   சூழ்ந்து கொள்ள  அனுமதித்து  விடும் என்றும் தெரிவித்துள்ளார் .
புத்தளத்தில்  மருத்துவ நிறுவங்களிலும் . மற்றும்  கற்பிட்டி வைத்தியசாலையின் முஸ்லிம் பெண் சிற்றூழியர்கள் தமது சீருடையை மாற்றியுள்ளதாகவும் அது  தொடர்பில் ஜாதிக ஹெல உரிமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப் பட்டுள்ளது .

நாட்டில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளிலும் மற்றும் ஏனைய  வைத்திய சாலைகளிலும்  முஸ்லிம் பெண் டாக்டர்கள் மற்றும் , தாதிமார் , ஊழியர்கள் ஹிஜாப்  அணித்து கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
புத்தளத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்தாலும் ,அரச வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் கடமைபுரியும் முஸ்லிம் பெண்களுக்கு  இஸ்லாமிய உடை ஹிஜாப் தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில்,   கடந்த  ஆண்டு 2012 பெப்ரவரி மாதம்  வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஆப்தீன் எஹியா புத்தளம் மாவட்டம், புத்தளம், கல்பிட்டி, மாம்புரி போன்ற பிரதேச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் சிற்றூழியர்கள் ஹிஜாப் இஸ்லாமிய உடையினை தமது கடமை நேரத்தினுள் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரும்   விஷேட அறிக்கை ஒன்றினைச் வடமேல் மாகாண சபையில் சமர்ப்பித்திருத்தார் .
அதை தொடர்ந்து   கடந்த  ஆண்டு 2012 மார்ச் மாதம் ஹிஜாப் தொடர்பான தடையை வடமேல் மாகாண  சபை உறுப்பினர் சட்டத்தரணி எ.எம்.கமருதீன்  மாகாண  சபையின் சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சர் அசோகா வடிவமங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்திருத்தார் .
இந்த நிலையில்   அமைச்சர் அசோகா வடிவமங்க வடமேல் மாகாணத்தின் வைத்தியசாலைகளில்   முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்கும்படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது .இந்த நிலையிலேயே ஜாதிக்க  ஹெல உரிமய  இதை தெரிவித்துள்ளது  .
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பரவலாக எல்லா வைத்திய சாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஜிஹாப் அணித நிலையில் பல ஆண்டுகளாக கடமை புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .முஸ்லிம் பெண் தாதிமார் , மற்றும் ஊழியர்கள் வெள்ளை சல்வார் கமீசுடன் வெள்ளை ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக் காட்டத் தக்கது.
படம் மூதூர் தள வைத்தியசாலை முஸ்லிம் பெண்  ஊழியர்கள்
7

No comments:

Post a Comment