ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களுக்கும் தேசிய சுதந்திர முன்னணி
ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர்
படுகாயமடைந்துள்ளார் என்று கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.
ரத்மலானை நான்காம் பிரதேசத்திலேயே இந்த கைகலப்பு இன்று மாலை
இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவரை
சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம்தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment