உருளைக்கிழங்கு ஏற்றி வரப்பட்ட கொள்கலன் வண்டி ஒன்றில் மறைத்து
வைக்கப்பட்டு, பாகிஸ்தான் பிரஜை ஒருவரினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள
சுமார் 30 ஆயிரம் கருத்தடை மருத்து ஊசிகள் யாருடைய தேவைக்காக கொண்டு
வரப்பட்டது, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை நாட்டுக்கு
உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என கோட்டை நாகவிகாரையின் விகாரதிபதி
மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விரிவான விசாரணைகளை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என
தெரிவித்துள்ள அவர், சிங்கள பெண்களைகுளந்தைப் பேறற்றவர்களாக்கும் ரகசிய
வேலைத்திட்டம் ஒன்று நாட்டிற்குள் செயற்படுத்தப்படுவதாக நாடு முழுவதும்
சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பெருந்தொகையான கருத்தடை ஊசிகள் சிக்கியமையானது அந்த சர்ச்சையை
உறுதிப்படுத்தியுள்ளது. அவற்றை இறக்குமதி செய்தவர்கள் தொடர்பான தகவல்கள்
வெளியிடப்பட வேண்டும் எனவும் மாதுளுவாவே சோபித தேரர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment