அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் மே மாதம் 7ம்
திகதி கடுமையான தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அன்றைய தினம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறும் கட்சியின்
உயர்ப்பீடக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ரஜாப்டீன்
குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து
உரிய தீர்வு கிடைக்காமையை ஆட்சேபித்தே இந்த தீர்மானம்
மேற்கொள்ளப்படவுள்ளதாக ரஜாப்டீன் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment