Monday, April 29

அஹதிய்யா பாடசாலைகள் சிறந்த முறையில் காணப்படுகின்றன - சரத் ஏக்கநாயக்க

வாழ்க்கையில்  உயர் நிலையை அடைவதற்கு கல்வி அவசியமாகும்.  எவரும் நினைக்கக் கூடாது கல்வி இல்லாவிட்டாலும் தொடர்ந்து  பணம் இருக்கும் என்று.  பணம் என்பது நிரந்தரமல்ல அந்த வகையில் கல்வி என்பது மிகவும் பெறுமதி மிக்கது. சகல பிள்ளைகளுக்கு சிறந்த வல்வியை நாம் வழங்குதல் வேண்டும். அந்தக் கல்வியுடன் அன்மீகப் பண்பும் இருத்தல் வேண்டும். ஆன்மீகப் பண்பு இல்லாத கல்வியில் எந்தவிதமான பயனும் இல்லை என்று மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கல்ஹின்னை பட்டகொல்லாதெனிய முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 35 வருட நிகழ்வுடன் பரிசளிப்பு விழா மற்று மகுடம் சஞ்சிகை நூல் வெளியீட்டு விழாவும் இன்று 28-04-02013 பாடசாலை மண்டபத்தில் அதிபர் ஏ. எஸ். எம். இக்ராம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
வெறுமனே கல்வியினை மாத்திரம் கற்பதில் அர்த்தமில்லை. அந்தக் கல்வியின் பால் பிழையான நடவடிக்கைகளில் இடுபட வாய்ப்புண்டு.  பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர் சமூகத்தில் நல்ல ஒழுக்கக் கல்வியை வழங்குவதற்காக மத்திய மாகாணத்தில் அஹதிய்யாப் பாடசாலை மிகச் சிறந்த முறையில் செயற்பட்டு வருகிறது. இலங்கை அரசாங்கத்தினால்  முதன் முதலாக  நிர்மாணிக்கப்பட்ட அஹதிய்யாப் பாடசாலை மத்திய மாகாணத்திலேதான் உள்ளது.
ஹரிபத்துவ தேர்தல் தொகுதியில் ஆயிரம் பாடசாலைத் திட்டத்தின் கீழ் நான்கு முஸ்லிம் பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. புதிய ஆரம்ப பாடசாலைகள் தேசிய பாசாலைகள் உள்ளிட்ட பாடசாலைகள் உள்ளன. அத்துடன் மத்திய மாகாண சபைக்கு உட்பட்ட  பாடசாலைகளும் உள்ளன. இப்பாடசாலைகளுக்குத் தேவையான  பௌதீக, ஆசிரியர் வளங்கள் போன்றவற்றை கட்டம் கட்டமாக வழங்கி இப்பிரதேச பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக பங்காற்றி வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் உரையாற்றுகையில்,
ஏனைய பணிகளை விட ஆசிரியர் பணி மிக உன்னதமானதாகும். ஆசிரியர் சமூகத்தை மதிக்காத இடங்களில் கல்வி தன்மை வீழ்ச்சி கண்டுள்ளது. கிழக்கு மற்றும் சில பகுதிகளில் ஆசிரியர் கமூகத்தை மதிக்கின்ற தன்மை காணப்படுகின்றபடியால் அப்பிரதேசம் கல்வியில்  எழுச்சி கண்டு வருகிறது என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பூஜாப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஏ, எல். எம் ரசான் மற்றும் அங்கும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment