Sunday, April 28

அஸாத் சாலியை பொலிஸில் ஆஜராகுமாறு உத்தரவு


கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை நாளை திங்கட்கிழமை காலை ஒன்பது மணிக்கு பொலிஸில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் நான்காம் மாடியிலுள்ள லசன்த ரத்னாயக்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அஸாத் சாலி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,

"எனது இல்லம் நேற்று சனிக்கிழமை மாலை இரகசிய பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது என்னை விசாரித்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் நான் வீட்டில் இருக்கவில்லை. எனது மனைவியே பொலிஸாரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தின் நான்காம் மாடியிலுள்ள லசன்த ரத்னாயக்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு எழுத்து மூலமான ஒரு குறிப்பை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர்"  என்றார்.இதேவேளை, அஸாத் சாலி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment