Thursday, July 28

தெருவிளக்குகளைப் பொருத்துவதற்கான ஆணையே கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது – பசில் ராஜபக்ச


[ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 02:13 GMT ]
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியை தமிழ் மக்களின் ஆணை என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

பிரதேசசபைத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் ஆணை குறித்துப் பேசுகிறது. ஆனால் சிறிலங்கா அதிபருக்கு முழு நாடுமே ஆணையை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரவு 7.30 முதல் 9 மணிவரை நாடகங்களை ஒளிபரப்பாதிருக்குமாறு தொலைக்காட்சிகள் கோரப்படும்



இரவு 7.30 மணிமுதல் 9.00 மணிவரை தொலைக்காட்சிகளில் நாடகங்களை ஒளிபரப்பாதிருக்குமாறு தொலைக்காட்சி அலைவரிசைகளிடம் அமைச்சரவை கோரிக்கை விடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இதன்மூலம், பாடசாலை மாணவர்கள் பாடங்களை கற்பதற்கு இந்நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே இதற்குக் காரணம்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு வலியுறுத்தினார். இதற்காக, நாட்டில் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளிடம் கூட்டுக் கோரிக்கையொன்றை அமைச்சரவை விடுக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவ்வேளையில் கருத்துத் தெரிவித்த நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, தொலைக்காட்சி நாடகங்களுக்குப் பதிலாக அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளையும் மேற்படி ஒன்றரை மணித்தியாலங்களில் ஒளிபரப்ப வேண்டும் எனக் கூறினார்.
அவருக்கு பதிலளித்த ஜனாதிபதி, அப்படியானால் வயதானவர்கள்கூட தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிடுவர் என சிரித்துக்கொண்டே கூறினாராம்.

Wednesday, July 27

2,700 அரச ஆசிரியர் நியமனங்களில் 230 பேர் மட்டுமே தமிழ் முஸ்லிம்கள்


[ புதன்கிழமை, 27 யூலை 2011, 10:34.30 AM GMT ]
நாடுமுழுவதும் 2,709 ஆசிரியர் நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இதற்கான அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. எனினும் அவற்றில் 230 நியமனங்கள் மட்டுமே தமிழர், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சின் அறிவித்தல்படி 1,662 சிங்கள மொழி மூல ஆசிரியர்களும், 230 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும், 138 அழகியல்பாட ஆசிரியர்களும், 84 தகவல் தொழில்நுட்ப பாடஆசிரியர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்கள் விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அரசு விரைவில் 4,000 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் என்று இரு மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
எனினும் அதில் அரைவாசிப்பேருக்கு மட்டுமே இப்போது நியமனங்கள் வழங்கப்படுகின்றன. ஏனையோருக்கும் நியமனங்கள் வழங்கப்படுமா என்று தகவல் எதுவுமில்லை.

செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட மதிய உணவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்


o                                                         


செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட மதிய உணவுப்பொதிகளை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டுமென கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. அவ்வுணவுப்பொருட்களை உட்கொள்ளும்போது, அச்சடிக்கப்பட்ட தாள்களில் காணப்படும் இரசாயனங்களால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும்  என்பதே இதற்கு காரணமாகும்.
செய்தித்தாள்களிலுள்ள ஈயம், உணவுப்பொதிக்குள் அகத்துறிஞ்சப்படும் அதன்மூலம் அது உடலுக்குள் செல்லும் இதனால் மனிதர்களுக்கு நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவர் டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் மதிய உணவுப்பொதிகளை விற்பனைசெய்யும் 105 விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரியிடமிருந்து சுகாதார சான்றிழதலொன்றை பெற்றுக்கொள்ளுமாறும் விற்பனையாளரை இனம்காண்பதற்காக உணவுப்பொதிகளில் முத்திரையொன்றை பொறிக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.
உணவுப்பொதி விற்பனையாளர்களால் விற்கப்படும் மதிய உணவுப்பொருட்களில் மூன்றில் ஒருபகுதி நண்பகல் அளவில் மோசமடைந்துவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மதிய உணவுப்பொருள் தயாரிப்பாளரின் பெயர், தயாரிக்கப்பட்ட திகதி, நேரம் என்பனவற்றை விற்பனையாளர்கள் குறிப்பிட வேண்டும் எனவும் இவ்விதிகளை மீறினால் அவர்களின் பதிவுகள் ரத்துச்செய்யப்படும் எனவும் டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.

Tuesday, July 26

2083: கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப்போர்!


July 26, 2011.... AL-IHZAN World News
"எமக்குத் தெரிந்ததெல்லாம், Anders Breivik ஒரு தீவிர வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி."
- Roger Andresen , ஒஸ்லோ பொலிஸ் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில்.

வலதுசாரித் தேசியவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முஸ்லிம் விரோதிகள், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், இது போன்ற கொள்கைகளைக் கொண்டவர்கள் எந்தளவு ஆபத்தானவர்கள் என்பதை ஒஸ்லோ படுகொலைகள் நிரூபிக்கின்றன. நோர்வேயின் முதலாவது பயங்கரவாத குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு, 90 பேரை படுகொலை செய்து விட்டு, போலீசிடம் சரணடைந்த Anders Breivik என்ற கொலைகாரனின் அரசியல் பின்னணி அது தான். மேற்கத்திய நாடுகளில், இன்னமும் இத்தகைய கொள்கைகளைக் கொண்ட வெள்ளையின பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்...
மேற்குலக அரசுகள் இதுவரை காலமும், கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் தம் மக்களுக்கு எதிரிகளாகக் காட்டி வந்தன. ஆனால், மிகவும் கொடிய பயங்கரவாதிகள் வெள்ளையின சமூகத்தினுள் மறைந்திருப்பதை புறக்கணித்து வந்துள்ளன. சாதாரணமாக, விமான நிலையைப் பரிசோதனையின் போது, ஆசிய, ஆப்பிரிக்க தோற்றம் கொண்டவர்களை மணித்தியாலக் கணக்காக சோதிப்பார்கள். அதே நேரம், வெள்ளை தோலைக் கண்டால், எந்த வித சோதனையுமின்றி போக அனுமதிப்பார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சிங்கள பெண் தெரிவு

 கண்டி மாவட்டத்தில் யடிநுவர பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் புஷ்பா கொடிதுவக்கு என்ற சிங்கள பெண்மணி 892 விருப்பு வாக்குகளைப் பெற்று  தெரிவு செய்யப்பட்டுள்ளார் . யடிநுவர பிரதேச சபைக்கு இம்முறை இரு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட யடிநுவர மிக்தாத் 2,347 விருப்பு வாக்குகளைப்   பெற்றும் ஐக்கிய தேசியக்கட்சியில் புதுமுகமாக களமிறங்கிய எம்.எல்.எம்.றம்ஸி 6,742 விருப்பு வாக்குகளைப் பெற்றும் தெரிவாகியுள்ளனர்.
  இதேவேளை,ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ரிஸ்மி மற்றும் எம்.அஸ்லம் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் எம்.மஹ்பூப், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.சி.எம்.சின்திகார் ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.

புத்தகம் வாசிக்கச் சென்றால் இலவசமாக பால் குடிக்கலாம்

புத்தகம் வாசிக்கச் சென்றால் இலவசமாக பால் குடிக்கலாம்
July 26, 2011  09:39 am

கொழும்பு பொது நூலகத்துக்கு சென்று நாளாந்தம் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு இலவச பால் பைக்கற் வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

நாளாந்தம் 200 தொடக்கம் 300 வரையிலான மாணவர்கள் கொழும்பு பொது நூலகத்தில் வந்து தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இவர்களில் சிலர் தொலைவில் இருந்து வருபவர்கள் எனவும் கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளர் ஓமர் காமில் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் நூலகத்துக்குள் நுழையும் போது பால் பைக்கற்றுக்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இத்திட்டத்துக்கு சில தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களும் உதவி புரியும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோ தாக்குதலுக்கு பின்னால் நைட்ஸ் டேம்பளர் என்ற பயங்கரவாத அமைப்பு


நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் மத்திய பகுதியில் நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து 20 மையில் துரத்தில் அமைந்துள்ள தீவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்துள்ளனர். இவற்றுக்கு பின்னால் ஐரோப்பாவை இணைக்கும்  கிஸ்தவ வலது சாரி பயங்கரவாதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பர்தாவுக்கு தடை - ஐரோப்பிய மனித உரிமை ஆணையம் கண்டனம்


July 25, 2011.... AL-IHZAN World News
பிரான்ஸை தொடர்ந்து ஐரோப்பாவில் இரண்டாவது நாடாக பெல்ஜியத்திலும் பெண்கள் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் முகத்தை மூடிச் சென்றால் 197 டொலர் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

பெல்ஜியம் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்ட மூலத்திற்கு அமைவாக இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த சட்டத்திற்கு எதிராக முகத்தை மூடும் வகையில் பர்தா அணிந்த இரு பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த சட்டத்திற்கு ஐரோப்பிய மனித உரிமை ஆணையமும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஐரோப்பாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரான்ஸிலும் இந்த தடைச் சட்டம் அமுலில் உள்ளது.

போக்குவரத்து முற்கொடுப்பனவு அட்டைகள்




(ஒலிந்தி ஜயசுந்தர)

பொதுமக்களின் போக்குவரத்து தொடர்பில் முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகம் செய்வதற்காக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இந்த புதிய முறை 2013ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறை பற்றி பஸ் சங்கங்களுடனும் போக்குவரத்து நிறுவனங்களுடனும் பேசப்பட்ட போது அவர்கள் இது பற்றி மிக ஆர்வமாக இருந்ததாக போக்குவரத்து செயலாளர் விக்டர் சமரவீர தெரிவித்தார்.

மேற்கு ஐரோப்பாவை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாக்க விரும்பினேன்: நோர்வே கொலையாளி





நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலும் உதோயா தீவிலும் கடந்த வெள்ளிக்கிழமை  தாக்குதல் நடத்திய 73 பேரை  கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அண்டெர்ஸ் பேரிங் பிரீவிக், தான் இக்கொலைகளுக்கு பொறுப்பேற்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் தான் குற்றவாளியல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
32 வயதான பிரீவிக், நேற்று திங்கட்கிழமை ஒஸ்லோ நீதிமன்றமொன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். தனது பிரசாரத்திற்கு நீதிமன்றத்தை பயன்படுத்த திட்டமிட்ட பிரீவிக், சீருடையொன்றை அணிந்து வருவதற்கும் பகிரங்க நீதிமன்ற விசாரணையில் பங்குபற்றுவதற்கும் அவர் சட்டத்தரணி மூலம் அனுமதி கோரியிருந்தார்.
எனினும் பாதுகாப்பு பிரச்சினையையும் முஸ்லிம்கள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான விசமப் பிரசாரத்திற்கும் அவர் நீதிமன்றத்தை பயன்படுத்துவார் என்பதாலும் அதிகாரிகள் இதற்கு தடை விதிக்கக் கோரினர். நீதிபதி அதிகாரிகளின் கோரிக்கையை  ஏற்றுக்கொண்டார்.
பிற்பகல் 1.30மணியளவில் அவர் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டார். அவர் விரும்பிய 'சீருடைக்கு' அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிவப்பு நிற 'ஜம்பர்' ஆடை அணிந்திருந்தார்.
பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் நீதிமன்றின் முன்னாள் குழுமியிருந்தனர். ஆனால் மூடிய அறையொன்றுக்குள் விசாரணை நடைபெற்றது.

Saturday, July 23

கிளிநொச்சி உமையாள்புரத்தில் ஒரு வாக்கும் பதிவாகவில்லை



[ Sat,July 23, 2011 ,06:00 pm ]



கிளிநொச்சி மாவட்டத்தில் உமையாள்புரம் பகுதியில் ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு நிலையத்தில் எவருமே வாக்களிக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்ட போது அங்கிருந்த மக்கள் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு வேறு மாவட்டங்களில் வசித்து வருகிறார்கள என

நம்பிக்கை கொண்ட ஒருவன் ஒரு இலட்சம் பேரின் சக்திக்கு நிகரானவன்:ஓஸ்லோ குண்டு




OurUmmah: நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் நேற்று மத்திய பகுதியில் இடம்பெற்றுள்ள  குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து சற்று தொலைவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 91 பேர் கொல்லப்பட்துள்ளனர்.
நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் நிகழ்ந்த குண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து உடோயா-Utoya.- தீவுப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 84 பேர் கொல்லபட்டுள்ளனர். இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் இந்த சம்பவங்களுடன் தொடர்பு பட்ட வலது சாரி தீவிரவாத அமைப்பு ஒன்றின் கிஸ்தவ அடிப்படைவாதியான 32 வயதான ஆண்டெர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்-Anders Behring Breivik- என்ற இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் விரோத சிந்தனை கொண்ட நபரை கைது செய்து நோர்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று நோர்வே செய்திகள் தெரிவிக்கின்றன. 

நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் தீவிரவாத தாக்குதல்: 87 பேர் பலி



[ Sat,July 23, 2011 ,10:48 am ]



ஓஸ்லோ : நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் உள்ள 20 மாடி கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அந்த கட்டிடத்தில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். குண்டு வெடித்த போது பிரதமர் ஜெனஸ் ஸ்டோல்டன் பெர்க் அலுவலகத்தில் இல்லை என்பதால், அவர் உயிர் தப்பினார். இந்த துப்பாக்கி சூட்டில் மொத்தம் 87 பேர் பலியாகினர். இதற்கு காரணமான தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். நார்வே நாட்டில் 7 ஆண்டுகளாக தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2004 ம் ஆண்டு மேட்ரிட் என்ற இடத்தில் நடந்த ரயில் குண்டு வெடிப்பில் 191 பேர் கொல்லப்பட்டனர் என்பது குற்பிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மக்களின் வாக்களர் அட்டைகளை எவரோ பெற்றுச் செல்கின்றனர் - கபே

கிளிநொச்சி மக்களின் வாக்களர் அட்டைகளை எவரோ பெற்றுச் செல்கின்றனர் - கபே


July 23, 2011  09:08 am
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரதிபுரம் ராமநாதபுரம் மலையாளபுரம் வட்டக்கச்சி ஆகிய பிரதேசங்களில் உள்ளவர்களின் வாக்கட்டகளை சிலர் வந்து வாங்கிச்செல்வதாக தேர்தல் கண்காணிப்புக் குழுவான கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இலங்கை இராணுவ வீரர்கள் பயிற்சி இன்றி திருப்பம்

இந்தியாவிலிருந்து இலங்கை இராணுவ வீரர்கள் பயிற்சி இன்றி திருப்பம்


July 23, 2011  02:17 pm

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் இராணுவ கல்லூரியின் தமிழர் ஆதரவாளர் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Friday, July 22

உலக சுங்க அமைப்பின் பொதுச் செயலாளர் இலங்கை விஜயம்





(குமாரசிறி பிரசாத்)

உலக சுங்க அமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் கினியோ மிக்குரியா இன்று இலங்கை வந்தடைந்தார். சுங்க நிர்வாகம் தொடர்பான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டே அவரது விஜயம் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

குறட்டையை தடுக்க கருவி அறிமுகம்!

குறட்டையால் குடும்பமே பிளவுபடும் நிகழ்வுகள் நடப்பதுண்டு. அடுத்தவரை இம்சிப்பதில் குறட்டையின் பங்கு அதிகம். இதற்கு தீர்வு காண நடத்தப்படும் ஆய்வுகளோ அதைவிட அதிகம். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது. பிளாஸ்திரி போல் உள்ள சிறிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை இரவில் படுக்கும் போது மேல் உதட்டில் ஒட்டிக்கொண்டால் போதும். குறட்டை பிரச்னை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


மனதை உருக்கும் நீர்வீழ்ச்சி விபத்து!


July 22, 2011

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தோர் நகரில் அமைந்துள்ள பட்டல் பாணி நீர்வீழ்ச்சியில் அள்ளுண்டு 3 பேர் உயிரிழந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நீர்வீழ்ச்சியானது அப்பிரதேசத்தில் மிக முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவ்விடத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் 5 பேர் திடீரென பெருக்கெடுத்த நீர் ஓட்டத்தால் அந்நீர்வீழ்ச்சியில் விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்தனர்.
இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவ்விடத்தின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு அங்கு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எனினும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அணையில் ஏற்பட்ட நீர்க் கசிவே இவ்வாறு திடீரென நீர் பெருக்கெடுத்தமைக்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தாமையே இதற்கான முக்கிய காரணமென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது மொத்தமாக ஐந்து பேர் அடித்துச் செல்லப்பட்டபோதும் அவர்களில் 2 பேர் பின்னர் காப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது



சிறிலங்காவுக்கான உதவிகளை தடை செய்ய அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக்குழு முடிவு


[ வெள்ளிக்கிழமை, 22 யூலை 2011,
போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கு நம்பகம் வாய்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை சிறிலங்காவுக்கான உதவிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிங்கள இனம் அழியும் அபாயம்! பிரதமர் கவலை





சிங்கள குடும்பங்களில் குறைந்த அளவில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது அதிகரித்து வருவதால் சிங்கள இனம் அழியும் அபாயம் உள்ளது' என, இலங்கை பிரதமர் ஜெயரத்னே தெரிவித்துள்ளார்.

தண்ணீருக்காக தோண்டப்பட்ட குழாய்க் கிணற்றிலிருந்து ஒரு வகை எரிவாயு வெளியேற்றம்




சிலாபம், முன்னேஸ்வரம் பெளத்த விகாரையில் தண்ணீருக்காக தோண்டப்பட்ட குழாய்க் கிணற்றிலிருந்து ஒரு வகை எரிவாயு வெளியேறி வருகிறது.

முதலில் குழாய்க் கிணறு தோண்டப்பட்ட போது நீருக்குள்ளிருந்து ஒருவகை வாயு வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டது. சுலபமாக தீப்பற்றிக் கொள் ளக்கூடியதாக இந்த வாயு இருந்ததுடன் இப்பகுதியில் மற்றுமொரு குழாய்க் கிணறும் தோண்டப்பட்டது. அதிலிருந்தும் இந்த
வகையான வாயு வெளியேறியது.

சவூதி அரேபியாவில் 17 ஆயிரம் கடவுச் சீட்டுகள் தீயில் எரிந்தன




வியாழக்கிழமை, 21 ஜூலை 2011 18:41
செங்கடல் நகரமான ஜித்தாவில் புகழ்பெற்ற வணிகக் குழுமங்களுள் அல் ஈசாயி குழுமமும் ஒன்று. மதீனா நெடுஞ்சாலையிலுள்ள இதன் ஆறு மாடி தலைமையகக் கட்டிடத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட  தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.  இதன் மொத்த மதிப்பு ஐந்து பில்லியன் ரியால்களுக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

Thursday, July 21

தலைப்பிறை தொடர்பான கருத்து வேறுபாடுகளை களையும் முதலாவது தேசிய பிறை மாநாட்டு தீர்மானங்கள் - விடிவெள்ளி.



அரபு மத்ரஸாக்களுக்கு விரைவில் பொதுவான பாடத்திட்டம் அறிமுகம் - விடிவெள்ளி.

மக்காவில் நிலம் வாங்கி கட்டிடம் கட்ட இந்தியா ஆலோசனை





வரும் காலங்களில் ஹஜ் பயணிகளின் தேவையை முன்னிறுத்தி மக்காவில் நிலம் வாங்கிகட்டிடம் கட்டுவது குறித்து இந்தியா ஆலோசித்துவருகிறது. இதுத்தொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியும், ஹஜ் மிஷனும் பேச்சுவார்த்தை நடத்தின.

அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்





ஈரானில் பறந்த ஆளில்லா அமெரிக்க உளவு விமானத்தை, அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்ததாக, அந்நாட்டிற்கான இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து, அந்நாட்டு அரசின் இணையதளத்தில், ஈரான் அரசியல்வாதியான அலி அகாசாடே கூறியதாக வெளியான செய்தியில், "ஈரானின் மத்தியில் யுரேனிய வளம் நிறைந்த பகுதியில் பறந்து கொண்டிருந்த, அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்தனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானத்தில் தோன்றும் அடையாளத்தை வைத்து சுனாமி கணிப்பு

ஜப்பானைத் தாக்கிய மிகப்பெரிய பூகம்பம் அதன் விளைவான பயங்கர சுனாமிப் பேரலை ஆகியவற்றிற்கு முன் வானில் சில அடையாளங்கள் ஏற்பட்டதாக இல்லினாய்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
 
 
 

இருமொழி பாடசாலைகள் ஆயிரம் இவ்வருடம்

 கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இருமொழி பாடசாலைகள் திட்டத்தின் கீழ் இவ்வருடம் நாடுதழுவிய ரீதியில் 1000 பாடசாலைகளில் இருமொழி போதனைக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திட்டத்திற்கு பொறுப்பான கல்விப் பணிப்பாளர் பிரியதா நாணயக்கார தெரிவித்தார்.

Wednesday, July 20

இது இவருக்கு தேவையா? "முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் தமிழர் இந்த நாட்டில் வாழமுடியாது! பாராளுமன்றத்தில் அஸ்வர்

[ புதன்கிழமை, 20 யூலை 2011, 08:36.08 AM GMT ]
முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ முடியாது என்று ஆளுந்தரப்பு எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார்.

'தொப்பி அணிந்தவாறான புகைப்படத்துடன் தே.அ.அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்'



முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் பிடிக்கப்பட்ட புகைப்படத்துடன் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பி. விஜயவீர தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் அனுப்பப்பட்ட சுற்றுநிரூபத்தையடுத்து தேசிய அடையாள அட்டைக்கு தொப்பி அணிந்தவாரான புகைப்பட விண்ணபபங்கள் நிராகரிக்கப்பட்டன.

காத்தான்குடி முஸ்லிம்கள் ஜிஹாத்திற்கு தயாராம் - கதை விடுகிறது லக்பிம


காத்தான்குடி சம்பவம் அந்நிய சமூகங்களால் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்பதை எமது வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக Lakbima News பத்திரிகையில் எழுதப்பட்ட Islamic Fundamentalism grows in Kattankudy எனும்          ஆக்கம் இங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 

மக்கா,மதீனாவை இணைக்கும்படியான அதிவேகரயில் வலையமைப்பு ஒன்றையமைக்க ஸ்பெய்ன்நடவடிக்கை.

 


 

மதீனா,ஜித்தா மற்றும் சவூதிஅரேபியாவின் மக்காநகரின் புனிதப்பிரதேசங்களை இணைக்கும்படியானஅதிவேகரயில் வலையமைப்பு ஒன்றையமைக்க ஸ்பெய்ன் நடவடிக்கை எடுத்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று விளையாட்டு அரங்கா தேவை? ரணில்

[ புதன்கிழமை, 20 யூலை 2011, 02:59.02 AM GMT ]
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த வடக்கு மக்களுக்கு இன்று தேவைப்படுவது 325 மில்லியன் ரூபா செலவில் நவீன விளையாட்டரங்கு அல்ல, அடிப்படைத் தேவைகளான வீடு மற்றும் வாழ்வாதாரமே. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 
தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய எதிர்க் கட்சித்தலைவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:

கடுவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.300 கட்டணம் அறவிடப்படும்

விரைவில் திறக்கப்படவிருக்கும் கொட்டாவ – காலி கடுவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு தடவைக்கு ரூ.300 கட்டணம் அறிவிடப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இதற்கான கட்டணங்களை அறவிடுவதற்கான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு, கொட்டாவ முதல் காலி, பின்னதுவ வரையான வீதி எதிர்வரும் மாதத்தில் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.