[ புதன்கிழமை, 27 யூலை 2011, 10:34.30 AM GMT ]
நாடுமுழுவதும் 2,709 ஆசிரியர் நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இதற்கான அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. எனினும் அவற்றில் 230 நியமனங்கள் மட்டுமே தமிழர், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சின் அறிவித்தல்படி 1,662 சிங்கள மொழி மூல ஆசிரியர்களும், 230 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும், 138 அழகியல்பாட ஆசிரியர்களும், 84 தகவல் தொழில்நுட்ப பாடஆசிரியர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்கள் விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அரசு விரைவில் 4,000 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் என்று இரு மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
எனினும் அதில் அரைவாசிப்பேருக்கு மட்டுமே இப்போது நியமனங்கள் வழங்கப்படுகின்றன. ஏனையோருக்கும் நியமனங்கள் வழங்கப்படுமா என்று தகவல் எதுவுமில்லை.
No comments:
Post a Comment