Wednesday, July 27

செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட மதிய உணவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்


o                                                         


செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட மதிய உணவுப்பொதிகளை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டுமென கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. அவ்வுணவுப்பொருட்களை உட்கொள்ளும்போது, அச்சடிக்கப்பட்ட தாள்களில் காணப்படும் இரசாயனங்களால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும்  என்பதே இதற்கு காரணமாகும்.
செய்தித்தாள்களிலுள்ள ஈயம், உணவுப்பொதிக்குள் அகத்துறிஞ்சப்படும் அதன்மூலம் அது உடலுக்குள் செல்லும் இதனால் மனிதர்களுக்கு நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவர் டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் மதிய உணவுப்பொதிகளை விற்பனைசெய்யும் 105 விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரியிடமிருந்து சுகாதார சான்றிழதலொன்றை பெற்றுக்கொள்ளுமாறும் விற்பனையாளரை இனம்காண்பதற்காக உணவுப்பொதிகளில் முத்திரையொன்றை பொறிக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.
உணவுப்பொதி விற்பனையாளர்களால் விற்கப்படும் மதிய உணவுப்பொருட்களில் மூன்றில் ஒருபகுதி நண்பகல் அளவில் மோசமடைந்துவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மதிய உணவுப்பொருள் தயாரிப்பாளரின் பெயர், தயாரிக்கப்பட்ட திகதி, நேரம் என்பனவற்றை விற்பனையாளர்கள் குறிப்பிட வேண்டும் எனவும் இவ்விதிகளை மீறினால் அவர்களின் பதிவுகள் ரத்துச்செய்யப்படும் எனவும் டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment