Tuesday, July 26

போக்குவரத்து முற்கொடுப்பனவு அட்டைகள்




(ஒலிந்தி ஜயசுந்தர)

பொதுமக்களின் போக்குவரத்து தொடர்பில் முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகம் செய்வதற்காக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இந்த புதிய முறை 2013ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறை பற்றி பஸ் சங்கங்களுடனும் போக்குவரத்து நிறுவனங்களுடனும் பேசப்பட்ட போது அவர்கள் இது பற்றி மிக ஆர்வமாக இருந்ததாக போக்குவரத்து செயலாளர் விக்டர் சமரவீர தெரிவித்தார்.

இந்த புதிய முற்கொடுப்பணவு அட்டை முறைமை பயன்பாட்டு வரும்போது சில்லறை காசு பற்றிய பிரச்சினை அற்றுப்போகும். பஸ் நடத்துனர்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமலும் போகும். இதனால் முதலாளிமார் நன்மையடைவர் என அவர் குறிப்பிட்டார்.

நாம் இந்த முறை பற்றி மேலும் ஆராய வேண்டும். அத்துடன் முன்னோடி செயற்றிட்டங்கள் மூலம் இதன் நிலைத்து இயங்கக்கூடிய ஆற்றலை உறுதி செய்ய வேண்டும். தனியார் துறையினர் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என விக்டர் சமரவீர மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment