இந்த தாக்குதலை நடத்திய Anders Breivik என்ற பயங்கரவாதி ஒரு கடும்போக்கு கிஸ்தவ அடிப்டைகொண்ட வலதுசாரி இரகசிய அமைப்பு ஒன்றை சார்ந்தவன் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Anders Breivik தனது பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்த முன்னர் நைட்ஸ் டேம்பளர் என்ற தான் சார்ந்த இரகசிய அமைப்பின் 1500 பக்கங்கள் கொண்ட “2083 – A European Declaration of Independence,” என்ற தலைப்பிலான கொள்கை பிரகடனம் ஒன்றை பின்லாந்தின் வலதுசாரிக் கட்சியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அந்த கொள்கை பிரகடனம் ஒன்பது வருடங்களாக அவனும் அவனின் இயக்கம் உறுபினர்களும் இணைந்து தயாரித்துள்ளனர் என்று நோர்வே செய்திகள் தெரிவிக்கின்றது .
அதனை 20 நிமிட வீடியோ பதிவாகவும் அனுப்பியுள்ளான். அதன் மிகவும் சுருக்கமாக வீடியோ ஒன்றும் Youtube பில் பதிவு செய்யப்பட்டுள்ளது . ஐரோப்பாவில் இஸ்லாமிய மயமாக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், மார்க்சியர்களுக்கும் எதிராக புனித சிலுவை போரை ஆரம்பிக்க உருவாக்கப்பட்ட இரகசிய அமைப்பொன்றின் தகவல்களாக அது வெளிவந்துள்ளன.
கொள்கை பிரகடத்தில் 2083 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐரோப்பா சர்வவல்லமை கொண்ட வெள்ளையரின் சாம்ராஜ்யமாக தமது பயங்கரவாத தாக்குதல்களின் ஊடாக உருவாக்கப்படும். அதன் முதல் படியாக ஐரோப்பாவை அழித்து கொண்டிருக்கும் தற்போதைய இடது சாரி சிந்தனை கொண்ட அரசுகள் அழிக்கப்படும். அதன் மூலம் ஐரோப்பா இஸ்லாமிய பயமாவது தடுக்கப்படும். அதை தொடர்ந்து இஸ்லாத்தின் மீதான சிலுவை போர் ஒன்று பிரகடனமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
அந்த பிரகடனம் 2002 இல் லண்டனில் நிறுவப்பட்ட Knights Templar என்ற ஒரு இரகசிய பயங்கரவாத அமைப்பு பற்றி கூறுகின்றது , அந்த அமைப்பின் ஒன்றுகூடல் ஒன்றுக்கு ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்து 12 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். “பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது. இனிமேல் ஆயுதப்போராட்டமே ஒரே வழி. உலகம் என்னை இப்போது ஒரு பயங்கரவாதியாக கணிக்கலாம். ஆனால் சில காலத்தின் பின்னர் மக்கள் என்னை நியாயத்திற்காக போராடிய தியாகியாக மதிப்பார்கள்.”
இவ்வாறு அந்தக் பயங்கரவாதியின் பிரகடன செய்தி அமைந்துள்ளது. பன்முகக் கலாச்சாரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் ஐரோப்பிய அரசுகளை கவிழ்ப்பதும், இஸ்ரேலுக்கு உதவுவதும், முஸ்லிம்களை ஐரோப்பாவை விட்டு விரட்டுவதும் அந்த இரகசிய அமைப்பின் நோக்கமாக குறிபிடப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாதி ஒருதனி மனிதன் அல்ல இது ஒரு சிந்தை போக்கு இதன் பின்புலத்தில் பல சக்திகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 93 பேரை கொன்றதாக இவன் குற்றவாளியாக நீதிமன்றத்தால் உறுதிப்படுத்த பட்டால் இவன் 21 வருடங்கள் மட்டும் தண்டனை பெறுவான் என்று தெரிவிக்கப்படுகின்றது.