விரைவில் திறக்கப்படவிருக்கும் கொட்டாவ – காலி கடுவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு தடவைக்கு ரூ.300 கட்டணம் அறிவிடப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இதற்கான கட்டணங்களை அறவிடுவதற்கான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு, கொட்டாவ முதல் காலி, பின்னதுவ வரையான வீதி எதிர்வரும் மாதத்தில் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீதியினூடாக ஆகக் குறைந்த வேகமாக 60 கி.மீ வேகத்திலும், ஆகக் கூடியதாக 120 கி.மீ வேகத்திலும் பயணிக்கலாம் எனவும் முச்சக்கர வண்டிகளும், மோட்டார் சைக்கிள்களும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment