Wednesday, July 20

மக்கா,மதீனாவை இணைக்கும்படியான அதிவேகரயில் வலையமைப்பு ஒன்றையமைக்க ஸ்பெய்ன்நடவடிக்கை.

 


 

மதீனா,ஜித்தா மற்றும் சவூதிஅரேபியாவின் மக்காநகரின் புனிதப்பிரதேசங்களை இணைக்கும்படியானஅதிவேகரயில் வலையமைப்பு ஒன்றையமைக்க ஸ்பெய்ன் நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான அங்கீகாரம் ஸ்பெய்னின் தன்னார்வக்குழுவொன்றுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் இத்திட்டத்திக்கு 7.0பில்லியன் யூரோக்கள்(10 பில்லியன் அமெரிக்க டொலர்கள்)செலவாகும்.என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் அதிவேகரயில் வலையமைப்புக்களை கொண்டுள்ளநாடுகளில் ஸ்பெய்ன் முதலிடத்தில் உள்ளது.தற்போது ஐரோப்பாவில் மிகநீளமான ரயில்வலையமைப்புக்களைக் கொண்ட நாடாக ஸ்பெய்ன் காணப்படுகின்றது.'அல் ஹரமைன்' அதிவேகரயில் வலையமைப்பு திட்டமானது,450 கிலோமீற்றர் தூரத்தை கொண்டதுடன்,இது ஜித்தா, மக்கா,மற்றும்மதீனா ஆகிய இரு புனிதநகரங்களையும் இணைக்கும்படியான போக்குவரத்து வலையமைப்பை நோக்காக் கொண்டே அமைக்கப்படவுள்ளது.




ஒவ்வொரு வருடமும் உலகம் பூராகவும் இருந்து ஏறத்தாள 25இலட்சம்  யாத்திரீகர்கள் ஹஜ்ஜுக்காகமக்காவுக்கு வருகைதருகின்றனர்.இவர்கள் சராசரியாக இருகிழமைகள் மக்காவில் தங்குகின்றனர்.மேலும்இத்திட்டத்தின் மூலம் ஹஜ் மற்றும் உம்ராகரியைகளுக்காக வரும் மக்கள் கூடுதல் அனுகூலம் அடைவார்கள்.என எதிர்பார்க்கப்படுகின்றது. 

No comments:

Post a Comment