Saturday, July 23

நம்பிக்கை கொண்ட ஒருவன் ஒரு இலட்சம் பேரின் சக்திக்கு நிகரானவன்:ஓஸ்லோ குண்டு




OurUmmah: நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் நேற்று மத்திய பகுதியில் இடம்பெற்றுள்ள  குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து சற்று தொலைவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 91 பேர் கொல்லப்பட்துள்ளனர்.
நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் நிகழ்ந்த குண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து உடோயா-Utoya.- தீவுப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 84 பேர் கொல்லபட்டுள்ளனர். இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் இந்த சம்பவங்களுடன் தொடர்பு பட்ட வலது சாரி தீவிரவாத அமைப்பு ஒன்றின் கிஸ்தவ அடிப்படைவாதியான 32 வயதான ஆண்டெர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்-Anders Behring Breivik- என்ற இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் விரோத சிந்தனை கொண்ட நபரை கைது செய்து நோர்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று நோர்வே செய்திகள் தெரிவிக்கின்றன. 

இவர் டிவிட்டர் என்ற சமூக வலைத்தளத்தில் அன்மையில் -கிஸ்தவ- நம்பிக்கை  கொண்ட ஒருவன் ஒரு இலட்சம் பேரின் சக்திக்கு நிகரானவன்’ என்று பதிவு செய்துள்ளார். இவர் நேற்று நடத்திய தாக்குதலும் இந்த பின்னணியை கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் இந்த குண்டு வெடிப்புத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. நார்வேயின் பிரபல பத்திரிகையான ‘வீஜி’யின் அலுவலகமும் சம்பவ இடத்துக்கு அருகில்  உள்ளது. பிரதமர் பாதுகாப்பாக இருப்பதாக, நார்வே அரசு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஓஸ்லோவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில நிமிடங்களில், ஓஸ்லோவில் இருந்து 20 மைல் துதாரத்தில் உள்ள உடோயா தீவில் நடைபெற்றுகொண்டிருந்த நடந்த ஆளும் தொழிற்கட்சியின் இளைஞர் அமைப்பு கூட்டத்தில் நடாத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 84 பேர் கொல்லப்பட்டும் நூற்று கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். இந்த தாக்குதலுக்கு வழமை போன்று முஸ்லிம் அமைப்புகள் தொடர்பு பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு  குளோபல் ஜிஹாத் என்ற இல்லாத அமைப்பு ஒன்றின் மீது குற்றம் சாட்டப்பட்டது  என்பது குறிபிடதக்கது. தற்போது குற்ற சந்தேக நபர் பிடிபட்டுள்ளதால் கதை வேறுபக்கம் திரும்பியுள்ளது. இது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்று நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment