கண்டி மாவட்டத்தில் யடிநுவர பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் புஷ்பா கொடிதுவக்கு என்ற சிங்கள பெண்மணி 892 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் . யடிநுவர பிரதேச சபைக்கு இம்முறை இரு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட யடிநுவர மிக்தாத் 2,347 விருப்பு வாக்குகளைப் பெற்றும் ஐக்கிய தேசியக்கட்சியில் புதுமுகமாக களமிறங்கிய எம்.எல்.எம்.றம்ஸி 6,742 விருப்பு வாக்குகளைப் பெற்றும் தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை,ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ரிஸ்மி மற்றும் எம்.அஸ்லம் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் எம்.மஹ்பூப், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.சி.எம்.சின்திகார் ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.