Friday, July 22

தண்ணீருக்காக தோண்டப்பட்ட குழாய்க் கிணற்றிலிருந்து ஒரு வகை எரிவாயு வெளியேற்றம்




சிலாபம், முன்னேஸ்வரம் பெளத்த விகாரையில் தண்ணீருக்காக தோண்டப்பட்ட குழாய்க் கிணற்றிலிருந்து ஒரு வகை எரிவாயு வெளியேறி வருகிறது.

முதலில் குழாய்க் கிணறு தோண்டப்பட்ட போது நீருக்குள்ளிருந்து ஒருவகை வாயு வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டது. சுலபமாக தீப்பற்றிக் கொள் ளக்கூடியதாக இந்த வாயு இருந்ததுடன் இப்பகுதியில் மற்றுமொரு குழாய்க் கிணறும் தோண்டப்பட்டது. அதிலிருந்தும் இந்த
வகையான வாயு வெளியேறியது.

முதலில் மீதேன் வாயு என ஆய்வாளர்கள் குறிப்பிட்ட போதும் பின்னர் அதனை மறுத்துள்ளனர். சுமார் 200 மீற்றர் தொலைவிற்கு குழாய் மூலம் வாயுவை கொண்டு சென்று பரிசோதித்த போதும் மிக எளிதாக தீப்பற்றிக் கொண்டது. இப்பகுதியில் மேலும் 2 குழாய் கிணறுகளை தோண்டி ஆய்வு செய்யும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விசேட குழுவொன்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

No comments:

Post a Comment