Wednesday, July 20

'தொப்பி அணிந்தவாறான புகைப்படத்துடன் தே.அ.அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்'



முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் பிடிக்கப்பட்ட புகைப்படத்துடன் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பி. விஜயவீர தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் அனுப்பப்பட்ட சுற்றுநிரூபத்தையடுத்து தேசிய அடையாள அட்டைக்கு தொப்பி அணிந்தவாரான புகைப்பட விண்ணபபங்கள் நிராகரிக்கப்பட்டன.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிரதிநிதிகள் தெளிவுபடுத்தியமையால் இந்த தடை நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிணங்க தொப்பி அணிந்த நிலையில் பிடிக்கப்பட்ட புகைப்படத்துடன் அரபு கல்லூரி மாணவர்கள் மற்றும் உலமாக்கள் மாத்திரம் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பிக்க முடியும் என ஆணையாளர் நாயகம் ஜகத் பி. விஜயவீர மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment