டெங்கு ஒழிப்பு திட்டம் தொடர்பில் தன் மீது மாத்திரம் குற்றம் சுமத்த
வேண்டாம் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர்களிடம்
கேட்டுக் கொண்டுள்ளார்.
டெங்கு ஒழிப்பு திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சு மீது மாத்திரம் குற்றம் சுமத்த சில ஊடகங்கள் முயற்சிப்பதாகவும் இது குறித்து உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மற்றும் அமைச்சரிடம் ஊடகங்கள் கேள்வி கேட்பதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜூலை 1ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரை இடம்பெறவுள்ள டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இன்று (28) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளை அமைச்சு தூக்கத்தில் இருப்பதாகவும் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து இப்பிரச்சினையை தீர்க்க முன்வருமாறு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவுக்கு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க சுற்றாடல் அமைச்சும் முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
(அத தெரண - தமிழ்)

No comments:
Post a Comment