|
|||||||||||||||||||||||||||||
சமயங்களின் பெயரால் இறைச்சிக்கடைகளை தாக்குவதையும் எரியூட்டுவதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது தலிபான்களின் பாணியிலான செயலாகும். காவியுடைய தரித்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது குற்றமாகும். பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்க இவ்வாறான குற்றச் செயல்கள் நடைபெறுவது மிகவும் மோசமானது என தென்மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன (ஐ.ம.சு.மு) தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்;- காவியுடைக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும். இதே வேளை காவியுடையின் பலத்தினால் சட்டம் மீறப்படும் போது பொலிஸார் அதற்குப் பயப்படத் தேவையில்லை. இவ்வாறானவர்களை மஜிஸ்திரேட்டின் உத்தரவின்றியே கைது செய்யலாம் என்று சட்டம் இருக்கும் போது பொலிஸார் குற்றச் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது. பொலிஸ் மா அதிபர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை அவர்களது தராதரங்களைக் கருதாது கைது செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாகாண சபை உறுப்பினர் ஒருவர் ஆசிரியை ஒருவரை மண்டியிடச் செய்த செய்கைக்கும் பெளத்த குருமார் சட்டத்துக்கு முரணாக தங்கல்லையில் இறைச்சிக் கடையொன்றுக்கு தீ வைத்த செயலுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றார். |
Friday, June 28
காவியுடையினரின் தலிபான் பாணியிலான தாக்குதல்களை அனுமதியோம்: அஜித் பிரசன்ன
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment