Sunday, June 30

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா?


வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் மாவை

வட மாகாண சபைக்கானத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அரசியற் கட்சிகள் தமது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
 
இந் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, கட்சியின் நீண்டகால உறுப்பினரும், சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் இறக்க முயற்சிப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
 
இது தொடர் பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக் கும் இதர கட்சிகள் மத்தியில் கருத்தொருமிப்பு காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தின் இன்றைய சூழலை கருத்திற்கொண்டு வட க்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதே பொருத்தமானதாக இருக்குமென ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட்; ஆகிய கட்சிகள் தெரிவிக்கின்றன. 
 
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இக்கட்சிகள் தேர்தலுக்குப் பின் னர் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுப வர் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த வகையில் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடியவர் மாவை சேனாதிராஜா என்பதே எமது கருத்தாகும்.
 
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர சுக் கட்சியைச் சார்ந்த ஒருவரே முதலமைச் சர் வேட்டபாளராக நிறுத்­தப்படுவார். கூட் டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. இந்த நிலையில் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதே பொருத்தமானதாக இருக்குமென ஈ.பி. ஆர். எல். எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி.தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்வ தற்கு டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்கள் முழு ஆதரவையும் வழங்கும் என்று டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.
 
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பா ளர் பல சவால்களுக்கு தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் முகம் கொடுக்க வேண் டிய நிலை ஏற்படும். இந்த சவால்களை சமாளிக்கும் ஆற்றல் மாவை சேனாதிரா ஜாவிடம் இருக்கிறது என்றும் அவர் தெரி வித்தார்.

No comments:

Post a Comment