நிகாப் - முஸ்லிம் பெண்களில் சொற்ப
தொகையினரால் அணியப்படுகின்ற ஓர் முகத்திரையாகும். பொது பல சேனா முஸ்லிம்
சமூகத்தை எதிர்க்கின்ற போதெல்லாம் அடிக்கடி விமர்சனத்திற்குட்படுவது இந்த
நிகாப் விடயம்தான்;. கடந்த வாரம் (ஜுன் 17) பதுளை நகரில் இடம்பெற்ற பொது பல
சேனா கூட்டத்தின் போது, பொது பல சேனாவின் சர்ச்சைக்குரிய பொதுச் செயலாளர்
'கலகொடத்தே ஞானசார தேரர், (இவர் அரலிய பிளேஸ், தலஹேனா வில் அமையப்பெற்றுள்ள
கிறிஸ்தவ கோயில் தாக்குதலுடன் தொடர்புபட்ட சுமார் 11 குற்றச்சாட்டுக்கள்
சுமத்தப்பட்டவர்) மீண்டும் நிகாபை தடை செய்யக்கோரி உள்நாட்டு வங்கிகளின்
சார்பில் அழைப்பு விடுத்தார்.
ஞானசார
தேரர் கூட்டத்தில் பேசுகையில், சில உள்நாட்டு வங்கிகள் தன்னோடு தொடர்பு
கொண்டு நிகாப் அணிந்து வருகின்ற வாடிக்கையாளுடன் கொடுக்கல் வாங்கல்களில்
ஈடுபடுவதில் பாரிய பிரட்சினைகளை எதிர்கொள்வதாகவும், இவை வங்கிகளுக்கு
பெரும் இடையுறாகவும் இருக்கிறது என்று தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.
'நிகாப் அல்லது புர்கா அணிகின்ற பெண்கள் வங்கிக்குச் சென்று, வங்கிக்
கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகையில் அவர்களிடம் அடையாள அட்டையை
காண்பிக்குமாறு வினவப்படும் போது, வங்கி உத்தியோகத்தர் முகம்
திரையிடப்பட்டிருக்கின்ற பெண்ணின் அடையாளத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள
முடியாதுள்ளது' என்று ஞானசார தேரர் குறிப்பிட்டார். 'குறித்த பெண்ணிடம்
முகத்தை காண்பிக்குமாறு வேண்டப்படுகையில் அவள் மறுத்துவிடுகிறாள்.
இவ்வாறிருக்கையில் ஆடைக்குள் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று நாம்
எவ்வாறு அறிந்து கொள்வது.?'
அவர்
மேலும் குற்றம் சுமத்துகையில், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கை நாட்டை
ஓர் அரேபிய நாடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். அடிப்படைவாதிகள் தங்களது
செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வார்களாயின், சிறுபான்மை
முஸ்லிம்கள் தகுந்த தண்டணையை எதிர்கொள்வார்கள் என்று கடின குரலில்
கூறினார்.
ஞானசார
தேரரின் குற்றச்சாட்டுக்களை பொது பல சேனாவின் பேச்சாளர் 'திலந்த விதனகே'
விபரிக்கையில், நிகாபுக்கான தமது எதிர்ப்பானது, இலங்கை சிறுபான்மை
சமூகத்தார் மீதான ஓர் தாக்குதல் அல்ல. ஆனால் இது உள்நாட்டு வங்கிகள்
சிரமங்களை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைகிறது என்று குறிப்பிட்டார்.
நாம்
எந்தவொரு சமூகத்திற்கும் எதிரானவர்கள் அல்லர். நாம் அவர்களை அவர்களது மத
அனுஷ்டானங்களை விட்டும் தடுக்கவும் தேவையில்லை. எவ்வாறாயினும், 'நிகாபானது
அதனை அணியாதோருக்கும் பிரச்சினையை ஏற்படுத்துகின்ற ஓர் ஆடையாக
இருக்கிறது. இது வங்கிகளுக்கும் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது
ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பிக்கும் போது
இவர்கள் அட்டையின் உண்மையான உரிமையாளராக இருந்தாலும், ஊர்ஜிதப்படுத்திக்
கொள்ள முகத்திரையை உயர்த்துவதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். அவர் மேலும்
விளக்குகையில், 'அது மாத்திரம் பிரச்சினையல்ல. இந்த முகத்திரை அணிந்த
நபர்கள் பாதையில் நடந்து செல்லும் போது மக்கள் அவர்கள் யார் என்பதை அறிய
மாட்டார்கள் அத்தோடு இது அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பில் தாக்கம்
செலுத்துகிறது.
நிகாப்
ஆனது, அனைத்து முஸ்லிம்களும் பின்பற்றுகின்ற ஒரு வழக்காறு அல்ல. எனவே அது
ஒரு அத்தியவசியமன்று. பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பது போன்று
இதனை தடைசெய்ய முடியும். ஒருமுறை இது தடைசெய்யப்பட்டு விட்டால்
இலங்கையர்கள் பாதையில் அடையாளங் காணப்பட முடியாத மனிதர்களினால்
ஏற்படக்கூடிய அச்சத்தை விட்டும் தைரியமாக நடைப்பயில முடியும் என்று கூறிச்
சென்றார்.
ஞானசார தேரரின் குற்றச்சாட்டை மறுக்கும் வங்கிகள்.
சன்டே
லீடர, ஞானசார தேரரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை மேற்கொள்ளும்
நோக்கில் சில உள்நாட்டு வங்கிகளை தொடர்பு கொண்டது. வங்கிகள் வாய்ச்சொல்
தேரரினால் முன்வைக்கபட்ட குற்றச்சாட்டை அடியோடு மறுத்துவிட்டது.
இலங்கையிலுள்ள ஸ்டேட் வங்கி, இலங்கை வங்கி என்பன நிகாப் அணிகின்ற
பெண்களுடன் எந்தவொரு அனுபவ ரீதியான பிரச்சினையும் நாம் சந்தித்ததில்லை
என்று குறிப்பிட்டன. கொமர்ஷியல் வங்கி உத்தியோகஸ்தகர்கள் கருத்து
தெரிவிக்கையில், முகத்திரை அணிகின்ற வாடிக்கையாளர்ளுடன் கொடுக்கல வாங்கல்
செய்கையில், அனுபவ ரீதியான எப்பிரச்சினையும் இருந்ததில்லை. அத்தோடு
முஸ்லிம் சமூகத்திலிருந்தே அவர்களது விஷேட தேவைகளை கவனித்துக் கொள்ள
அவர்களுக்கென்று பிரத்தியேகமான வங்கியியல் வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டிருக்கிறன என்று குறிப்பிட்டனர்.
தேசிய
சேமிப்பு வங்கி போன்ற ஏனைய வங்கிகள் குறிப்பிடுகையில், முகத்திரை
அணிகின்ற முஸ்லிம் வாடிக்கையாளர்களுடன் கொடுக்கல்- வாங்கல்களில்
ஈடுபடுகையில், அனுபவ ரீதியிலான எந்தவொரு பிரச்சினைகளையோ, கஷ்டத்தையோ
சந்தித்ததில்லை என்று குறிப்பிட்டன.
தங்கள்
முகங்களை திரையிடுகின்ற அதிகமான முஸ்லிம் பெண்கள், சன்டே லீடருக்கு
கருத்து தெரிவிக்கையில் பொதுவாக அவர்கள் வங்கிகளுக்கு செல்வதில்லை என்றும்,
அவர்களுக்கு பதிலாக அவர்களது வங்கி நடவடிக்கைகளை அவர்களது கணவர்மார்களே
கவனித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டனர்.
அரச
கரும மொழிகள் மற்றும் தேசிய நல்லினக்க விவகாரங்கள் அமைச்சர் வாசுதேவ
நானயக்கார - இவர் நாட்டில் அமைதியைச் சீர்க்குழைக்கும் நோக்கில்
இடம்பெறுகின்ற அனேகமான நிகழ்வுகளில் இடம் பெறக்கூடிய வெறுக்கத்தக்க அல்லது
கண்டன பேச்சுக்களுக்கு எதிராக அண்மையில் அமைச்சரவையில் அறிக்கை
சமர்ப்பித்தவர்- இவர் குறிப்பிடுகையில், அரசானது ஓர் ஜனநாயக அந்தஸ்தில்
இருந்து கொண்டு இத்தகையதோர் ஆடை நியமத்தை தடை செய்ய முடியாது என்று
குறிப்பிட்டார்.
'ஜனநாயக
இடதுசாரி முன்னிலைக் கட்சியும,; நானும் பிறரின் தனிப்பட்ட வாழ்வில்
தலையிடுகின்ற மக்களுக்கு எதிரானவர்கள். நாங்கள் பிறரின் வழக்காறுகளுடன்
ஒத்துப்போகாதிருக்கலாம். ஆனால் அவர்களுடன் அவசியம் சகிப்புத்தன்மையோடு
இருக்க வேண்டும்' என்று அமைச்சர் தெரிவித்தார்.
'இந்த
நிகாப் விடயமானது, தேசிய பாதுகாப்பு முதல் சமூக பாதுகாப்பு வரையிலான
பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு காரணமாக அமைய முடியும் என்பதை
அங்கீகரிப்பதோடு, மேலும் தேவை (பாதுகாப்பு சம்பந்தமான) ஏற்படுமாயின் நிகாப்
அணியக்கூடிய முஸ்லிம்கள் மூலமாகவே அவர்களது அடையாளத்தை நிரூபிப்பதற்கான
சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட முடியும் என்பதையும் நான் அங்கீகரிக்கிறேன்.'
ஆடை நியமத்தை தடைசெய்வது அரசின் வேலையல்ல என்பதை அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.
நிகாபை அறிந்து கொள்ளுதல்
முகத்திரை
அணிகின்ற பெண்களில் ஒரு சில விதிவிலக்கானவர்கள் மாத்திரமே தமக்கு
தேவையேற்படும் போது, வங்கிகளை நாடி தமது சொந்த வங்கியியல் தேவைகளை நிறைவு
செய்கின்றனர். மஸாயினா (25) நிகாப் அணிகின்ற ஓர் இளம் முஸ்லிம் பெண்மணி.
இவள் தனது வங்கியியல் அனுபவத்தினைக் விவரிக்கையில்
'எனது
ஆடை முறை காரணமாக வங்கிகளில் எந்தவொரு கஷ்டமும் எனக்கு ஏற்பட்டதில்லை.
எனக்கு இலங்கை வங்கி, கொமர்ஷியல் வங்கி மற்றும் அமானா வங்கிகளில் வங்கிக்
கணக்கு இருக்கிறது. இருந்தபோதிலும், எவ்விதமான பிரச்சினையும் எனக்கு
இருந்ததில்லை. இலங்கை வங்கி மற்றும் கொமர்ஷியல் வங்கிகளை நான் பல
சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட ரீதியாக அனுகியிருக்கிறேன் ஆனால் ஒருபோதும்
எவ்வித பிரச்சினைக்கும் முகங்கொடுத்ததில்லை.' இவரின் கூற்று பொது பல
சேனாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிர்மறையாய் இருப்பது
ஆச்சரியமளிக்கிறது.
'ஒருதடவை
கொமர்ஷியல் வங்கயில் ஒரு புதிய கணக்கை ஆரம்பித்த போது, வங்கித்
தரவுகளுக்காக எனது புகைப்படம் தேவைப்பட்மையால், வங்கி என்னை மீள் அழைத்தது.
அப்போது அவர்கள் என்னோடு மிகவும் கண்ணியமான முறையில் நடந்துகொண்டார்கள்.
எனக்கு வசதியாக புகைப்படம் எடுக்க ஓர் பெண் உத்தியோகத்தரை நியமித்தார்கள்.
ஆனால் புகைப்படத்தை ஓர் ஆண் எடுத்திருந்தாலும் நான் ஒன்றும் நினைத்திருக்க
மாட்டேன் என்று நான் கூறினேன்.' முகத்திரை அணிகின்ற பெண்கள் நெகிழ்ந்து
செயற்படக்கூடிய விடயங்களை தொடர்புபடுத்தி இவர் கூறுகிறார். மஸாயினாவிற்கு
நிகாப் ஒரு மார்க்க நடைமுறை என்பதற்கும் அப்பால் அது அவளுக்கு பாதுகாப்பினை
வழங்குகிறது. அதேநேரம் ஏககாலத்தில் விடுதலை உணர்வையும் கொடுக்கிறது.
'முதலாவதாக,
இது அல்லாஹ்வின் ஓர் கட்டளை என்பதை உறுதியாக நம்புவதோடு, அல்லாஹ்வினால்
பெண்களாகிய எமக்கு வழங்கப்பட்டிருப்பதில் நிச்சயமாக அதில் எமக்கு
நன்மைத்தான் இருக்கும் என்பதையும் ஆழமாய் அறிவேன். நான் நிகாபை அணிய
தொடங்கிய நாள் தொட்டு நான் மிகவும் விடுதலையளிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.
இது எனது உரிமை. நான் அணிந்துக்கொண்டிருக்கின்ற இறை நியதியை
விரும்புகிறேன்.'
மஸாயினாவின்
கருத்துக்களிற்கிணங்க, நிகாப் அணிவது தங்கள் முகங்களை மறைக்காத அவளைச் சூழ
இருக்கின்றவர்களை நோவினை செய்ய மாட்டாது. அவள் இதுவரையும் எந்தவொரு
சங்கடமான அனுபவங்களையும் சந்தித்ததில்லை. நிலைமை இவ்வாறிருக்கையில், ஏன்
பொது பல சேனா மற்றும் ஏனைய அமைப்புக்கள் இதனை தடைசெய்ய வேண்டும்??; இதுதான்
அவளுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. உண்மையாக நிகாப் அணிகின்ற
எந்தவொரு பெண்மணியும் நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஏதாவது பாதுகாப்பு
பரிசோதனை தேவைப்படுமிடத்து, அதனை ஒருபோதும் அவள் மறுக்க மாட்டாள்.
அப்படியாயின் ஏன் இந்த அமைப்புக்கள் இதில் தாக்கஞ்செலுத்த வேண்டும்?? என்று
அவள் கேள்வியெழுப்புகிறாள். நிகாப் அணிவது ஓர் தெரிவுச்சுதந்திரம். எனவே
எல்லா முஸ்லிம் பெண்களும் முகத்திரை அணிவதை நடைமுறைப்படுத்துவதில்லை.
அத்தோடு முகத்திரையானது, பாதையில் செல்கின்ற ஆண்களின் கெட்ட பார்வையை
விட்டும் தடுக்கின்ற ஆடையாகும் என்று தெளிவுபடுத்திச் சென்றார்.
No comments:
Post a Comment