இலங்கையானது ஒரு கிலோவாற் மின்கட்டணத்திற்கு 0.37 டொலர்களை அறவீடு
செய்வதால், ஆசியாவில் மின்சாரக் கட்டணம் மிகவும் அதிகரித்துள்ள நாடுகளில்
இலங்கைம் ஒன்றாகக் காணப்படுகின்றது.
இலங்கையில் பயன்படுத்தப்படும்
மின்சாரத்தின் மூன்றில் இரண்டு பகுதியானது நிலக்கரி அல்லது எரிபொருளைப்
பயன்படுத்திப் பெறப்படுகிறது. வறட்சி நிலவும் காலங்களில் நீரிலிருந்து
மின்சக்தியைப் பெறமுடியாது.
2013ல் மின்சார உற்பத்தியில் 750 மில்லியன் டொலர்கள் நட்டம்
ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் மே மாதத்திலிருந்து வரிவீதம் அதிகரிப்பதால்
மின்சாரக் கட்டணத்தில் 225 மில்லியன் டொலர்கள் மேலதிக நட்டம்
ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment