|
|||||||||||||||||||||||||||||
13 திருத்தச் சட்டத்தில் திருத்ம் மேற்கொள்வது தொடர்பில் ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டிற்கு மாற்றமாக செயற்பட்ட மாகாண சபை
உறுப்பினர்கள் இருவரை கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்க தீர்மானித்துள்ளதாக
அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரையே கட்சி இடைநிறுத்தியுள்ளது.
புத்தளத்தை சேர்ந்த எஹியா ஆப்தீன் மற்றும் குருநாகலை சேர்ந்த றிஸ்வி ஜவகர்ஷா ஆகிய இரண்டு உறுப்பினர்களே இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
13 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவதற்கு அங்கீகாரம்
வழங்குவது தொடர்பிலான பிரேரணை நேற்று வட மேல் மாகாண சபையில்
சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது மு.காவின் வடமாகாண சபை உறுப்பிணர்கள்
இருவரும் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாற்றமாக குறித்த சட்டமூலத்திற்கு
வாக்களித்துள்ளனர். முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் அதிகாரத்தை தரும்
சட்டத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளனர்.
இதேவேளை சிறுபாண்மை சமூகத்திற்கு காப்பீடாக இருக்கும் 13 ஆம் சரத்திற்கு
எதிராக வாக்களித்ததன் மூலம் கட்சி மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படலாம்.
இதனால் இவர்களை உடனடியாக கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்க தலைமை
தீர்மானித்துள்ளது.
இந்த இடைநிறுத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அவர்களுக்கு
அறிவிக்கப்படவுள்ளதாகவும் எவ்வாறாயினும் இந்த பிரேரணைக்கு ஆதரவாக
வாக்களிக்குமாறு இந்த இரண்டு உறுப்பினர்களும் அரசாங்கத்தினால்
அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என தெரியவருவதாக அவர் குறிப்பிட்டார்.
|
Thursday, June 27
முஸ்லிம் காங்கிரஸிருந்து இருவரை இடைநிறுத்த தீர்மானம்
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment