Thursday, June 27

இணைந்திருக்க முடியாதவர்கள் விலகிச் செல்லுங்கள் - ஜனாதிபதி மஹிந்த




  ஆளும கட்சியுடன் இணைந்திருக்க முடியாதவர்கள் விலகிச் செல்லலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சிக்குள் குழுக்களாக பிரிவடைந்து செயற்பட அனுமதியளிக்கப்பட மாட்டாது. ஆளும கட்சியில் இருக்க முடியாவிட்டால் குழுக்களாக அணி திரளாது விலகிச் செல்ல முடியும். குழுக்களாக பிளவடைந்த முடிந்த சிலரை நான் ஏற்கனவே அனுப்பியிருக்கின்றேன்.
எந்தவொரு நபருக்கும் தனிப்பட்ட ரீதியான கருத்துக்களை வெளியிட முடியும், அதில் தவறில்லை. எனினும் அவை ஆளும் கட்சியின் நிலைப்பாடாக அமையாது.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சியின் நிலைப்பாட்டிற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டையே அனைவரும் வகிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் 13ம் திருத்தச் சட்டம் குறித்து வெளியிட்டு வரும் மாறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment