Saturday, June 29

சிங்கள இனத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் மட்டுமே அதிகாரம் இருக்கும்: அஸ்கிரிய பீடாதிபதி



சிங்கள இனத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் மட்டுமே அதிகாரம் இருக்கும் என கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உடுகம சிறிபுத்த ரக்கித தேரர் தெரிவித்துள்ளார்.
கூடினால் இன்னும் ஐம்பது ஆண்டுகள் மட்டுமே சிங்கள இனத்திற்கு இந்த நாட்டின் அதிகாரம் இருக்கும் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஏனைய இனங்களின் அதிகாரத்திற்கு அடிபணிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் சிங்கள இனத்திற்கு தனித்துவமான அடையாளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விடும்.

எதிர்காலம் பற்றி சிந்திக்காது குறுகிய இலாபங்களை கருத்திற் கொண்டு செயற்படும் சிங்கள மக்களே இந்த நிலைமைக்கு பொறுப்பு.

சிங்கள மக்களின் நடவடிக்கைகளினால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பு ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளது.

இப்படியே சென்றால் இன்னும் 30 – 40 ஆண்டுகளில் மொத்த நாட்டையும் இழக்க நேரிடும். எமது மக்கள் தங்களது பூர்வீக நிலங்களை சொற்ப தொகைக்கு விற்பனை செய்கின்றனர். இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

சிங்கள மக்களிடமிருந்து அதிகாரத்தை பறித்துக் கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வரும் தருணத்தில் அது பற்றி சிங்கள மக்கள் கவலைப் படுவதில்லை என அஸ்கிரி பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

ரம்புக்வெல்ல விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment