பௌத்த
பிக்குவான விராது மற்றும் அவரது பௌத்தம் 969 என்ற
அமைப்பினால் நடத்தப்படும் இனவாத, மதவாதத் தாக்குதல்களைக் கண்டித்து,
அதற்குத் தலைமை தாங்கும் விராது பிக்குவின் அட்டைப்படத்துடன், “பௌத்த
தீவிரவாதத்தின் முகம்” என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டுள்ளது
நியுயோர்க்கில் இருந்து வெளியாகும் ‘ரைம்‘ சஞ்சிகை.
இந்த சஞ்சிகையை எவ்வாறு இலங்கையில்
அணுகுவது தொடர்பாக ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் ஊடக
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லயுடன் கலந்தாலோசித்ததாக ஆங்கில இணையம் ஒன்று
செய்தி வெளியிடுள்ளது.
இதேவேளை, பொது
பல சேனா அமைப்பினர் இலங்கைக்கு வந்த இந்த சஞ்சிகையின் அனைத்து
பிரதிகளையும் கிழித்து விடுமாறு ஊடக அமைச்சிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடக அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன்
ஆலோசித்ததாக அந்த ஆங்கில இணையம் செய்தி வெளியிடுள்ளது.
ரைம் சஞ்சிகையின் ஒன்லைன் பிரதிகளையும்
வாசிக்க முடியாதவாறு தடைசெய்யுமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சஞ்சிகையை ஏற்கனவே மியன்மார் அரசு தடைசெய்துள்ளது.
No comments:
Post a Comment