சர்ச்சைக்குரிய
13ஆம் திருத்தச் சட்டம்மூலம் குறித்து வாக்கெடுப்புகளை முஸ்லிம் காங்கிரஸ்
பகிஷ்கரிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேல்
மாகாணசபை மற்றும் கிழக்கு மாகாணசபையில் 13இல் திருத்தம் மேற்கொள்வதற்கான
வாக்கெடுப்புகளில் முஸ்லிம் காங்கிரஸ் கலந்துகொள்ளாதென நம்பப்படுகிறது.
இத்திருத்தம் குறித்து வடமேல்
மாகாணசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது இரு முஸ்லிம் காங்கிரஸ்
உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததினால் உடனடியாக அமுலுக்கு
வரும்வகையில் அவர்களை கட்சித் தலைமை இடைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரசாங்கத்தை
பகைத்துக்கொள்ளாமலும் 13இல் திருத்தம் செய்வதற்கு ஆதரவளிக்காமலும்
வாக்கெடுப்பு நடைபெறும்போது அதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ்
ஒதுங்கியிருக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ் பேராளர்
மாநாட்டின்போது, சிறுபான்மையினருக்கு எதிரான தீர்மானங்களை எமது கட்சி
முற்றாக எதிர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், 13இல் திருத்தம்
செய்யும்போது அதனை முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாக எதிர்க்கப்போவதாகவும்
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 13இல் திருத்தம்
மேற்கொள்வதற்கான மேல் மற்றும் கிழக்கு மாகாணசபை வாக்கெடுப்பின்போது
யாருக்கும் பாதகமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் ஒதுங்கியிருக்கப்போவதாக
அரசியல் விசர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Mohamed Firous from Navamani
No comments:
Post a Comment