Friday, June 28

எமக்கு அரசாங்கம் ஆதரவளிக்கவில்லை: பொது பல சேனா






எமது அமைப்புக்கு அரசாங்கம் ஆதரவளிக்கிறது என ஊடகங்கள் உட்பட பலரால் முன்வைக்கப்படும் குற்றச்ாட்டை மறுப்பதாக பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவ் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு மேலும் குறிப்பிடுகையில்,
நாம் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக பல தடவைகள் முயற்சி செய்தோம். எமது அமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரி 18 கடிதங்களை அனுப்பினோம். அதன் பிற்பாடுதான் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி ஜனாதிபதியை நாம் சந்தித்தோம். இதுவே எமக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான தொடர்பை வெளிப்படுத்தப் போதுமானது.
ஆனால் பாதுகாப்புச் செயலாளருக்கும் எமது அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரருக்குமிடையில் நீண்ட காலமான தனிப்பட்ட உறவு இருக்கிறது. அதனால்தான் எமது அழைப்பையேற்று அவர் காலியில் இடம்பெற்ற அலுவலக திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டார் என்றார்.

No comments:

Post a Comment