Friday, May 17

உலகத்திலேயே சிங்கள இனத்தவர்கள் சிறந்து விளங்குகின்றனர் - அஸ்வர் MP

உலகத்திலேயே சிங்கள இனத்தவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.ஏனைய சமூகத்தினருடன் அந்நியோன்யமாகப் பழகக்கூடியவர்கள். இதனை வரலாற்றிலும் கண்டு கொள்ள முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினரும். பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ். ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

ருவன்செல்லை தொகுதியல் கன்னத்தோடடை ரோஜா மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

யூ.எல்.எம் பாரூக் அறக்கட்டளை மூலம் இப்பகுதி வறிய மக்களுக்கு மூவாயிரம் மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"தானம் வழங்குவதிலும் சிங்களவர்கள் பிரபல்யமானவர்கள் வெசாக் பண்டிகை காலங்களில் இதனை நாம் கண் கூடாக காணலாம். அரேபிய குடிமக்கள் இலங்கைக்கு வந்து சிங்களப் பெண்களை திருமணம் செய்துக் கொண்டதன் காரணமாகவே சன்மார்க்கத்தைப் பரப்பக்கூடிய ஒரு கட்டுக்கோப்பான முஸ்லிம் சமூகம்  இலங்கையில் உருவாகியது. 

அன்று வாழ்ந்த சிங்களவர்கள் காணி நிலம், இருப்பிடங்களை வழங்கி முஸ்லீம்களை மலைநாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பாக வாழ வைத்தனர்.இன்றுள்ள சூழ்நிலையில் எமது முஸ்லிம்கள் இந்த வரலாற்று உண்மைகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.

எனவே கடந்த காலங்களை போன்று எதிர் காலத்திலும் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களை அரவணைத்து ஆதரவாக வாழ்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை எனவும் ஏ.எச்.எம்.அஸ்வர்   ஹாஜி தெரிவித்தார்.

உலகத்திலேயே சிங்கள இனத்தவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.ஏனைய சமூகத்தினருடன் அந்நியோன்யமாகப் பழகக்கூடியவர்கள். இதனை வரலாற்றிலும் கண்டு கொள்ள முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினரும். பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ். ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

ருவன்வெல்லை தொகுதியல் கன்னத்தோடடை ரோஜா மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யூ.எல்.எம் பாரூக் அறக்கட்டளை மூலம் இப்பகுதி வறிய மக்களுக்கு மூவாயிரம் மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"தானம் வழங்குவதிலும் சிங்களவர்கள் பிரபல்யமானவர்கள் வெசாக் பண்டிகை காலங்களில் இதனை நாம் கண் கூடாக காணலாம். அரேபிய குடிமக்கள் இலங்கைக்கு வந்து சிங்களப் பெண்களை திருமணம் செய்துக் கொண்டதன் காரணமாகவே சன்மார்க்கத்தைப் பரப்பக்கூடிய ஒரு கட்டுக்கோப்பான முஸ்லிம் சமூகம் இலங்கையில் உருவாகியது.

அன்று வாழ்ந்த சிங்களவர்கள் காணி நிலம், இருப்பிடங்களை வழங்கி முஸ்லீம்களை மலைநாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பாக வாழ வைத்தனர்.இன்றுள்ள சூழ்நிலையில் எமது முஸ்லிம்கள் இந்த வரலாற்று உண்மைகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.

எனவே கடந்த காலங்களை போன்று எதிர் காலத்திலும் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களை அரவணைத்து ஆதரவாக வாழ்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை எனவும் ஏ.எச்.எம்.அஸ்வர் ஹாஜி தெரிவித்தார்.

No comments:

Post a Comment