Wednesday, May 15

தமிழ்.. தமிழ்... என்று சொல்லியே அடித்து நொருக்கினர்: தங்காலை தமிழர்கள் தெரிவிப்பு

தமிழ்.. தமிழ்... என்று சொல்லியே அடித்து நொருக்கினர்: தங்காலை தமிழர்கள் தெரிவிப்பு (காணொளி)
தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (14) இரவு 9.14 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மரியவத்தை தமிழ் கிராமத்திற்குள் நுழைந்த சிங்களவர்கள் சிலர், 15 தமிழ்களுடைய வீடுகளையும் ஒரு சிங்களவரது வீட்டையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளார்.

இந்த தாக்குதலின்போது காயமடைந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பிரதேசவாசி ஆண்:- "முதலில் எமது வீட்டை தாக்கினர். அனைத்தையும் அடித்து நொருக்குமாறு நகரசபை தலைவர் கூறியதாக தெரிவித்தே தாக்கினர். சமிந்த, லால், லாலின் மகன் ஆகியோர் எமது வீட்டை தாக்கினர்."

பிரதேசவாசி ஆண்:- "தமிழர்கள் அனைவரையும் அடித்து கொலை செய்யவும் என தலைவர் கூறியதாக சொல்லியே தாக்கினர். வீடுகளை உடைத்தனர். நாம் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு ஓடி ஒழிந்துவிட்டோம். 12, 15 பேர் வந்தனர். இரும்பு, வாள், கத்தி என்பனவற்றை வைத்திருந்தனர்."

பிரதேசவாசி பெண்:- "தாக்குதல் நடந்த போது நானும் இருந்தேன். நீங்கள் பயமின்றி நொருக்குங்கள் என்று தலைவர் கூறியதாக சொல்லியே தாக்கினர். வீட்டுக்கு பின்புறமாக நாங்கள் தப்பிச் செல்ல முயற்சித்தும் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டோம்."

பிரதேசவாசி பெண்:- "நகரசபைத் தலைவர் சொல்லிதான் அனைத்தையும் நொருக்குகிறோம் என்று கூறியே தாக்கினர். நாங்கள் அனைவரும் பிள்ளை குட்டிகளை சுமந்துகொண்டு காட்டில் இருந்தோம்."

பிரதேசவாசி பெண்:- "தலைவர் நொருக்கச் சொன்னார் என்று கூறியே தாக்கினர். எல்லாவற்றையும் நொருக்கிக் கொண்டு ஓடி வந்தனர். கண்ணாடி, யன்னல் உடைத்தனர். நாம் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீதியில்தான் இருந்தோம். பிள்ளைகளை இன்று பாடசாலைக்கும் அனுப்பவில்லை."

பிரதேசவாசி ஆண்:- "இது மஹிந்த மாத்தியாவின் ஊர். அவருடைய ஊராக இருந்து ஜாதி, இன, பேதம் இல்லை என கூறினாலும் அதுபோன்று நடப்பதில்லை. சரியாக உழைத்து சாப்பிட முடியவில்லை. எந்த நேரத்தில் நெருப்பு எரியும் என்ற அச்சத்தில் சரியாக தூங்குவதும் இல்லை. இவை கஸ்டப்பட்டு வாங்கிய பொருட்கள் இவற்றுக்கு யார் நட்டஈடு வழங்குவது."

பிரதேசவாசி ஆண்:- "தமிழ்.. தமிழ்.. என்று சொல்லிக்கொண்டு மக்களின் வீடுகளை நாளாந்தம் உடைக்கின்றனர். குடித்தால் இங்குதான் வருவர். ஜனாதிபதியும் இதனை பார்க்க வேண்டும். நாங்கள் தமிழர்கள் தங்காலையில் எமக்கும் உரிமை உண்டு. ஜனாதிபதி இதை பார்த்து ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை ஒரு வருடம் சிறையில் தள்ள வேண்டும் இல்லாவிடின் இங்கிருந்து அகற்றவிட வேண்டும். நாங்கள் நிம்மதியாக இருப்போம். தமிழ்... தமிழ்.. என்று சொல்கின்றனர். தங்காலையில் மாத்திரமே இவ்வாறு. வேறு எங்கும் இப்படியில்லை. இங்கு தமிழர்களுக்கு இருக்க இடமில்லை."

பிரதேசவாசி பெண்:- "தமிழர்களை வைப்பது நல்லதல்ல என்று தலைவர் கூறினார் என சொல்லிக் கொண்டுதான் நொருக்கினர்."

(அத தெரண - தமிழ்)

No comments:

Post a Comment