Friday, May 17

பாகிஸ்தான் யுத்தக் கப்பலில் கிழக்கு முதலமைச்சர்

pakcmM03
திருகோணமலை, அஸ்ரப் இறங்குதுறையில் தரித்து நிற்கும் பாகிஸ்தான் நாட்டு யுத்தக் கப்பல் சைஃப் இற்கு கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கப்பல் கப்டன் அஹமத் இன் விஷேட அழைப்பின் பேரில் நேற்று வியாழக்கிழமை மாலை விஜயம் செய்தனர். இவ்விஜயத்தின் போது பாகிஸ்தான் தூதுவர், மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உள்ளிட்டோரும் இணைந்துகொண்டனர்.
இந்தக் கப்பல் திருகோணமலைக்கு விஜயம் செய்ததன் ஞாபகார்த்தமாக கிழக்கு முதலமைச்சருக்கு கப்பல் கப்டன் அகமட் நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கி கௌரவித்தார். அத்துடன், இரவு நேர விருந்துபசாரமும் இவர்களுக்கு அளிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை நங்கூரமிட்ட இக்கப்பல் இன்று வெள்ளிக்கிழமை அஸ்ரப் துறைமுகத்தில் இருந்து தமது பயணத்தைத் தொடர்கின்றது.
இதில் வந்திருந்த 188 கடற்படை வீரர்களும் 14 அதிகாரிகளும் திருகோணமலை மாவட்டத்தில் முக்கியமான இடங்களைப் பார்வையிட்டனர்.

pakcmM01
pakcmM02

No comments:

Post a Comment