Friday, May 17

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றவும் – வாசு/ ஏன் வெளியேற்ற வேண்டும்? – கோத்தபாய

வடக்கில் நடைபெறவுள்ள தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற வேண்டுமானால், தற்போது வடக்கில் கடமையாற்றுகின்ற அனைத்து இராணுவத்தினரையும் மட்டுப்படுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகிறார்.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவத்தினர் இராணுவம் என்ற மமதையில் தம் கடமையைச் செய்ய முயல்வார்களாயின், இலங்கையில் நீதியான தேர்தல் நடைபெற்றது என்று சர்வதேசத்திற்கு சொல்ல முடியாமல் போகும் என வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகிறார்.

எதுஎவ்வாறாயினும் இதுபற்றி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிடும்போது, வடக்கில் பாதுகாப்பிற்குப் பங்கம் விளையும் வகையில் எக்காரணம் கொண்டும் இராணுவத்தினரை வெளியேற்ற மாட்டோம் எனவும், வடக்கின் அபிவிருத்திக்காகவே இராணுவத்தினர் உள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

‘பாதுகாப்பு விடயத்தில் இராணுவத்தினரைப் பற்றி அந்த அமைச்சர்களுக்குச் சந்தேகம் இருக்கின்றதா என நான் கேட்க விரும்புகின்றேன். அவ்வாறன்றி, இராணுவத்தை வடக்கிலிருந்து அகற்றுக எனக் கூறுவதற்குக் காரணம் இராணுவத்தினர் வடக்கில் அரசியலில் ஈடுபடுவதினாலா? 13 திருத்தச் சட்டம் என்பது எங்கள் நாட்டுக்குள் பலாத்காரமாக நுழைக்கப்பட்டதாகும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்! மாகாண முதலமைச்சரின் அதிகாரத்தின் கீழ் பொலிஸ் அதிகாரம் வருகிறது. நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்… பொலிஸாரை அரசியலுக்குள் கொண்டுவருவது சரியா? இந்த அமைச்சர்களுக்குத் தேவையானதெல்லாம் என்னவென்றால் இவ்வாறான அர்த்தமற்ற விடயங்களை முன்வைத்து அரசியலில் தான் பெரியமனிதனாக வேண்டும் என்பது…

ரீ.என்.ஏ. 25 ஆண்டுகளாக அதுபற்றி ஒன்றுமே பேசவில்லை. தற்போது நடப்பதொன்றும் மக்களுக்காக நடப்பதில்லை. சம்பந்தன் மற்றும் சுரேஷ் நினைப்பதே நடக்கின்றது. அவ்வாறு நடந்துகொண்ட பாகிஸ்தானுக்கு என்ன நடந்தது? சமாதானம் கிடைத்ததா? ஏனைய நாடுகளுக்குத்தான் அமைதி கிடைத்ததா? இல்லவே இல்லை. இராணுவத்தினரை அகற்றுவது என்பது நடக்காத காரியம்… பைத்தியம் … பைத்தியம்… என்றும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிடுகிறா

No comments:

Post a Comment