Tuesday, May 21

ஜப்பான் கப்பல்கள் இரண்டு திருமலை துறைமுகத்தில் நங்கூரம்

ஜப்பான் கப்பல்கள் இரண்டு திருமலை துறைமுகத்தில் நங்கூரம் (படங்கள்)




































ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

நேற்று (20) பகல் இந்த கப்பல்கள் இரண்டும் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவை மேம்படுத்துவதோடு இலங்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதே இவற்றின் வருகைக்கான காரணம் என கிழக்கு மாகாண ஆளுனர் அத்மிரல் மொஹான் விஜயவிக்ரம தெரிவித்தார்.

இக்கப்பல் 20ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 22ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுபுனம என்னும் இக்கப்பலானது 151 மீற்றர் நீளம் கொண்டதுடன் 4650 கிலோ பாரம் கொண்டது. இவை அதி நவீன வசதிகளைக் கொண்டு காணப்பட்டது.

இதில் 180 உத்தியோகத்தர்கள் உள்ளனர். கரிபம என்னும் கப்பலானது 151 மீற்றர் நீளமும் 4550 கிலோ எடை கொண்டதுடன் 190 உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர்.

No comments:

Post a Comment