Monday, May 13

மகாசன் புயல் இலங்கைக்கு அருகில்; தாக்கம் ஏற்படலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்

மகாசன் புயல் திருகோணமலையிலிருந்து 650 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளதால் இதன் தாக்கம் இலங்கைக்கு ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி வசந்த குமார் விடிவௌ்ளிக்கு தெரிவித்தார்.
 
மகாச புயல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு ஊடான ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 70 கி.மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசலாம். அத்தோடு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கடற் பகுதிகள் கொந்தளிப்பா காணப்படும்.
 
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு கரையோரங்களில் அவதானமாக இருக்கவேண்டும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இலங்கையில் தென்மேற்கு திசையில் கடும் காற்று வீசும். அதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் இருளுடன் மேக மூட்டங்கள் காணப்படும் எனவும் குறிப்பிட்டார்.
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 200 மி.லீ. வரையிலான கடும் மழை வீழ்ச்சி பதிவாகும். அத்தோடு கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் 100 மி.லீ. வரையிலான மழைவீழச்சி பதிவாகலாம். மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment