Monday, May 13

19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : ஹசன் அலி

hassan ali slmc

9ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
17ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை இரத்து செய்யும் வகையில் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்வது அநீதியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் எனவும், 19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டணி சேராது எனவும், தனித்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சில கடும்போக்குவாத சக்திகளின் தேவையற்ற அடக்குமுறைகள் குறித்து முஸ்லிம்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும், காவல்துறையினர் அதனை கவனத்திற்கொள்ளத் தவறியுள்ளதாக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment