Thursday, May 16

வெசாக் தினத்தன்று தோரணம், வெளிச்சக்கூடு, தானம் வழங்குதல் கூடாது

வெசாக் தினத்தன்று தோரணம், வெளிச்சக்கூடு, தானம் வழங்குதல் கூடாது வெசாக் போயா தினத்தன்று வெசாக் தோரணம், வெளிச்சக்கூடு காட்சிப்படுத்தல் மற்றும் தானம் வழங்குதல் கூடாது என பௌத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வெசாக் தினத்தில் சமய வழிபாடுகளில் மாத்திரமே ஈடுபட வேண்டும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் தோரணம், வெளிச்சக்கூடு காட்சிப்படுத்தல் மற்றும் தானம் வழங்குதல் 25ம் திகதியில் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சி, பக்தி பாடல் நிகழ்ச்சி போன்றவை வெசாக் தினத்தன்று நடத்தக்கூடாதென பௌத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெசாக் தினத்தன்று அரக்கருத்துக்களை போதிக்கும் நிகழ்வுகள் மாத்திரம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெசாக் தினத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபடாது குழுவாக இணைந்து செயற்படுவது கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(அத தெரண - தமிழ்)

No comments:

Post a Comment