Thursday, May 16

வட தேர்தலை தமிழ் கூட்டமைப்பு புறக்கணிப்பு?

வடக்கில் காணி கபளீகரம் நிறுத்தப்படாத வரை வட மாகாண தேர்தலில் பங்கேற்பதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்து உள்ளது என்று தெரிவித்து உள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்.
கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அல்லது பேச்சாளர்கள் பங்கேற்று இருக்கவில்லை.
இதனால் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மனோ கணேசன் அறிவித்தார்.
இவர் இங்கு முக்கியமாக பேசியவை வருமாறு:-
“ நவம்பரில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவதற்கு முன்னர் செப்டெம்பரில் வட மாகாண தேர்தல் நடத்தப்படுவதாக உள்ளது.
வட மாகாண தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று தேசிய நல்லிணக்க ஆணைக் குழு சிபாரிசு செய்து உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்குபற்றுதல் இல்லாமல் நடத்தப்படுகின்ற தேர்தல் மணமகள் இல்லாத திருமணம் போல் இருக்கும். ”

No comments:

Post a Comment