Thursday, May 16

ஹமாஸ் - பதா இணைந்து ஐக்கிய அரசாங்கம்


இன்னும் மூன்று மாதங்களுக்குள் பலஸ்தீனில் ஹமாஸ்- பதாவுக்கு இடையில் ஐக்கிய அரசொன்றை அமைக்க இரு தரப்பும் இணக்கம் கொண்டுள்ளன. 
கடந்த செவ்வாய்க்கிழமை கெய்ரோவில் இடம்பெற்ற பதா- ஹமாஸ் பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டதாக ஹமாஸ் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கெய்ரோ பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு கிடைத்துள்ளது. எதிர்வரும் ஜுலைக்குள் இரு தரப்பு சமரச உடன்படிக்கையை நடைமுறைக்குக் கொண்டவர இணக்கம் ஏற்பட்டது என பலஸ்தீனின் மான் செய்திச் சேவைக்கு ஹமாஸ் உறுப்பினர் மூஸா அபூ மர்சூக் குறிப்பிட்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பதா- ஹமாஸ¤க்கு இடையிலான சமரச உடன்படிக்கைக்கு அமைய, காபந்து அரசொன்று அமைக்கப்பட்டு 12 மாதங்களுக்குள் 6 பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்த இணக்கம் காதணப்ப ட்டிருந்தது. 
எனினும் இந்த சமரச உடன்படிக்கை இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. எனினும் புதிய ஐக்கிய அரசில் இடம்பெறும் உறுப்பினர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என மூஸா அபூ மர்சூக் குறிப்பிட்டார். ஆனால் எதிர்வரும் காலத்தில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இரு ஆணைகளைப் பிறப்பிக்கவுள்ளதாக பதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒன்று தேசிய அரசை அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் என்பதோடு தேர்தல் திகதியும் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment