Monday, May 13

உலகில் எந்த நாட்டுக்கும் செல்வோம், எவரும் கேள்வி கேட்க முடியாது - பொதுபல சேனா


பொதுபலசேனா அமைப்பின் அமெரிக்க மற்றும் நோர்வே பயணங்கள் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாம் உலகில் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்வோம். எவருடனும் பேச்சு நடத்துவோம். அது குறித்து எம்மிடம் எவரும் கேள்வி கேட்க முடியாது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பு நோர்வேயிலுள்ள நிறுவனமொன்றிலிருந்து நிதியைப் பெற்று, இங்கு முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகின்றது என்றும், அந்த அமைப்பின் அமெரிக்க மற்றும் நோர்வே பயணங்கள் அதன் வலையமைப்பை சர்வதேச மயப்படுத்துவதற்காகவே என்றும் எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இவ்வாறான நிலையிலேயே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
"அண்மைக்காலமாக எமக்கெ திராகப் போராட்டங்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நாம் எதற்கும் அஞ்சப் போவதில்லை.   எமது அமைப்பின் அமெரிக்க மற்றும் நோர்வே பயணங்கள் குறித்தும் பலரும் பலவாறாகக் கருத்துக் கூறுகின்றனர். நாம் மேற்குலக நாடுக ளிடமிருந்து நிதி பெறுவதாகவும் குற்றஞ்சாட்டினர். 
இவை அனைத்தும் பொய். எமது அமைப்பின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், எமக்கெதிராக இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். 
இலங்கையில் வாழும் பௌத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அமெரிக்க மற்றும் நோர்வே முதலான நாடுகளிலுள்ள பௌத்த குரு மார்கள், பௌத்த அமைப் பினர் ஆகியோரைத் தெளிவுபடுத்தவும், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவுமே நாம் அங்கு சென்றோம் என்றார் ஞானாசார தேரர்.

No comments:

Post a Comment