Saturday, April 6

கடும்போக்குடைய நான்கு இஸ்லாமிய அமைப்புக்கள் இலங்கையில்? திவயின தகவல்!



News Service
இலங்கையில் நான்கு கடும்போக்குடைய இஸ்லாமிய அமைப்புக்கள் இயங்கி வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் முதல் தடவையாக இலங்கையில் இயங்கி வரும் இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்புக்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்புக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் அந்நட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்தத் தகவலை அனுப்பி வைத்துள்ளார். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டு வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். இந்த கடும்போக்குடைய இஸ்லாமிய அமைப்புக்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

No comments:

Post a Comment